PC:Scroll.in |
'என்டிடிவி இந்தியா' செய்தி தொலைக்காட்சியின் ஒளிபரப்பை ஒருநாள் நிறுத்திவைக்கும் மத்திய அரசின் முடிவானது கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தை ஒடுக்குவதில் அதன் நிலை மேலும் மூர்க்கமடைந்திருப்பதைக் காட்டுகிறது. ஊடகங்கள் மீது தொடங்கும் இப்படியான ஒடுக்குமுறைகள், எல்லாத்தளங்களிலும் வரவிருக்கும் எதேச்சதிகாரத்தின் முன்னறிவிப்பேயாகும். இன்று என்.டி.டி.வி.க்கான தடையும் தணிக்கையும் நாளை எல்லா ஊடகங்களுக்கும் தனிநபர்களுக்கும் பரவும். மட்டுமல்ல, அரசின் பொல்லாப்புக்கு ஆளாகிவிடக்கூடாது என்கிற அச்சத்தில் சுயதணிக்கைக்கும் வழிவகுக்கும். இந்த நிலை ஜனநாயகத்தின் அடிப்படை மாண்புகளுக்கே எதிரானது.
எனவே, என்.டி.டி.வி ஒளிபரப்பை மத்திய அரசு முடக்கும் அதே நவம்பர் 9ம் தேதியை அரசின் இம்முயற்சிக்கு எதிரான கண்டனம் தெரிவிக்கும் நாளாக மாற்றுவது அவசியமாகிறது. அதன்பொருட்டு அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள், சமூக ஊடகங்கள் ஆகியவற்றில் நவம்பர் 9ம் தேதி கருப்புப்பட்டைகளை ஏற்றி அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஓர் இயக்கத்தை முன்னெடுக்கலாமா என்பதை பரிசீலியுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக