முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

January, 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வெறும் பதிவு என்ன வெங்காயத்துக்கு? - ஆதவன் தீட்சண்யா

தோழர். எஸ்.ஜி.ரமேஷ்பாபுவின் "பிறிதொரு பொழுதில்" - கட்டுரைத்தொகுப்புக்கான முன்னுரை
தனது அறிவு, திறமை, கல்வி, ஆர்வங்கள் வழியாக சொந்த வாழ்வை பொருளாதாராரீதியாக மேம்படுத்திக் கொள்வதே இங்கு வாழ்வின் ஆகப்பெரும் லட்சியமாக முன்னிறுத்தப்படுகிறது. அதற்காக வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் கையாளப்படும் கீழ்த்தரமான உத்திகள் யாவும் முன்னேறுவதற்கான வழிகள் எனக் கொண்டாடப்படுகின்றன. சம்பாதனை, சொத்து, சொகுசுகள், பிரபலம், அதிகாரம் மட்டுமே வாழ்க்கை என்கிற இந்த செக்குமாட்டுத்தனத்தை புறந்தள்ளுவதற்கு ஒரு மனோதிடம் தேவைப்படுகிறது. அவ்வாறு விலத்தியடித்துவிட்டதற்கு பிறகு மேற்கொள்ளும் புதிய வாழ்வில் ஒன்று நீங்கள் துறவியாகலாம் அல்லது அரசியல் ஊழியராகலாம். துறவியானவர் எவற்றையெல்லாம் துறந்திருக்கிறார் என்கிற கேள்வி ஒருபுறமிருக்க, அவர் அவருக்காக மட்டுமே வாழ்கிறவராக தேங்கிப்போய்விடுகிறார். அந்தவகையில் அவர் சுயநலத்தை முன்னிறுத்தி அலைகிறவர்களுக்குள் ஒரு தனிவகையானவர். மற்றபடி எவ்வகையிலும் வேறுபட்டவரில்லை. மட்டுமல்ல, வாழ்க்கை முன்வைக்கும் சவால்களை எதிர்கொள்ளும் மனத்துணிவற்று ஒதுங்கி தப்பித்துப்போகிறவருமாகிறார். இந்த அ…

கேவலர்கள் - ஆதவன் தீட்சண்யா

காட்டேரியும் கழுகும் நரியும் புலியும் அஞ்சியொடுங்கும் கொடியோரென மிருகக்கூட்டத்திலிருந்து நீக்கப்பட்டவர்களை தத்தெடுத்திருக்கும் அரசாங்கம்  அவர்களிடத்தில் கொடுத்திருக்கிறது அதிகாரத்தையும் ஆயுதங்களையும் 
ஒழுங்கீனங்களையும் உற்பாதங்களையும் ஊரெங்கும் பரப்பி   குற்றங்களின் கிடங்கில் புழுத்து நெளியும் அவர்களது ரத்தநாளத்தில் நிறைந்திருப்பதோ சாக்கடையும் நஞ்சும் 
வலியோரிடம் இரந்தும் எளியோரிடம் பறித்தும் வயிறுவளர்க்கும் கேவலத்திற்கு படிப்பெதற்கு பயிற்சிதானெதற்கு
பாலுறுப்புகளாலான வசைச்சொற்களை மட்டுமே   மொழியறிவாய் கொண்ட அவர்கள் மனித உடலில் குறிகளையே தேடியலைகிறார்கள்
அவிழ்த்துக் காட்டத்தான் போகிறார்கள் என்றான பிறகு  சீருடையோ வேறுடையோ வீண் அம்மணமாகவே இருக்கட்டும்
அறுத்தெடுக்கத் தோதாயிருக்கும் எங்களுக்கு.
4.1.2017


மாண்புமிகு இரும்பு ஆண்மணி – ஆதவன் தீட்சண்யா

வருடத்தின் கடைசிநாள். முடியப்போகும் ஆண்டின் முக்கிய நிகழ்வுகள் என்று எதையெதையோ தொலைக்காட்சிகள் தொகுத்து கொட்டிக்கொண்டிருந்தன. வரவிருக்கும் புத்தாண்டை வரவேற்கும் விதமான சிறப்பு நிகழ்ச்சிகளும் களைகட்டியிருந்தன. பிரபலமான நடிகநடிகையரும் தலைவர்களும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டிருந்தார்கள். இவர்களாக ஒரு காலக்கணக்கை வைத்துக்கொண்டு அது முடிந்ததாகவும் தொடங்குவதாகவும் கொண்டாடுவதைப் பார்க்க எனக்கு அபத்தமாக இருந்தது. தொலைக்காட்சியை நிறுத்திவிட்டு வெளியே போய்வரலாம் என்று கிளம்பும் போதுதான் ‘இன்னும் சற்று நேரத்தில் தொலைக்காட்சிகளில் தோன்றி நாட்டு மக்களிடையே பிரதமர் உரையாற்றவிருக்கிறார்’ என்கிற ‘‘பிரேக்கிங் நியூஸ்’’ திரையில் மின்னத் தொடங்கியது.
லிபரல்பாளையம் பிரதமர்களிலேயே மாண்புமிகு இரும்பு ஆண்மணி மிகவும் வித்தியாசமானவர். அதற்கு காரணம் அவரை வளர்த்தெடுத்த ராஷ்ட்டிரீய சர்வநாஸ்தி சபை. அலங்காரமான பெயரை வைத்துக்கொண்டு நாட்டை நாஸ்தியாக்கும் போலித்தனத்திற்கு பதிலாக, நாட்டை நாஸ்தியாக்கத்தான் போகிறோம் என்பதை பெயரிலேயே உணர்த்திவிடும் வெளிப்படைத்தன்மையைப் பாராட்டி அச்சபையை மக்கள் மிருகபலத்தோடு வெற்றிபெறச் ச…

ஏன் தோழர்களே இப்படி அடிபட்டுச் சாகிறீர்...? - ஆதவன் தீட்சண்யா

மக்களை வாட்டிவதைக்கும் மோடுமுட்டியின் செல்லாக்காசு திட்டம் தோல்வியடைந்துவிட்டதை அம்பலப்படுத்தி 31.12.2016 அன்று ஏ.டி.எம். முன்னால் ஆர்ப்பாட்டம் நடத்திய DYFI, CPIM தோழர்கள் பள்ளிக்கரணை போலிசாரின் கண்மூடித்தனமான தாக்குதலுக்கு ஆளாகியுள்ள இவ்வேளையில் 2010 ஜூலையில் எழுதப்பட்ட இக்கட்டுரை சட்டென நினைவுக்கு வந்தது. நடுரோட்டில் தள்ளி அடித்து உதைத்து மண்டையைப் பிளந்து குண்டுக்கட்டாகத் தூக்கி போலிஸ்காரர்கள் வேனுக்குள் வீசுகிறார்கள். அப்போதும்கூட கோஷம் என்ன வேண்டிக் கிடக்கிறது இந்த மார்க்சிஸ்ட்டுகளுக்கு? தூக்கிக்கிட்டுப் போனாலே அய்யோ அம்மா கொல்றாங்களே அய்யய்யோ கொல்றாங்களே என்று கூப்பாடு போட பழகியிருக்க வேணாமா இந்நேரத்தில்? அல்லது அப்படி தூக்கிவீசுவதை லைவ்வாக படம்பிடித்து திரும்பத்திரும்ப ஒளிபரப்பி அனுதாபத்தை கிளறிவிட்டு வாக்குகளாக மாற்றி ஆட்சியைப் பிடிக்கத் தோதாக ஏழெட்டு தொலைக்காட்சி குடும்பங்கள் அல்லது குடும்பத் தொலைக்காட்சிகளையாவது இந்த மார்க்சிஸ்ட்டுகள் கைவசம் வைத்திருக்கிறார்களா என்றால் அதுவுமில்லை. இப்படி எந்த முன்னேற்பாடுமே இல்லாத இவர்களை யார் போராடச் சொன்னது? ஊடகங்களை சரிக்கட்டி ஆதரவாக வைத்…