நகரத்தின் மோஸ்தருக்குள்
முற்றாய் பொருந்திவிட்ட என்னை
அத்தனை சுளுவாய் அடையாளம் கண்டுவிடமுடியாது
எனக்கே தெரியுமன்றாலும்
அறுந்த செருப்பை
தெருவோர காப்ளரிடம் தான் தைத்துக்கொள்கிறேன்
வீட்டுக்கே வந்து டோபி துணியெடுத்துப் போகிறான்
முன்னொரு காலத்து என் அம்மா போல
நீயமரும் இருக்கையிலேயே
எனக்கும் சவரம் சலூனில்
பரம்பரையின் அழுக்கு அண்டிவிடக்கூடாதென்று
நகங்களைக்கூட நறுவிசாக வெட்டிக்கொள்கிறேன்
அதீத கவனத்தோடு ஊரை மறக்கிறேன்
புறப்பட்டுவந்த சுவடு தெரியாதிருக்க
சண்டேக்களில் மட்டனோ சிக்கனோதான்
பீப் என்றால் என்னவென்றே தெரியாது
என் பிள்ளைகளுக்கு
ரிசர்வேசனுக்கெதிரான உங்களின் உரையாடலின் போதும்
"நாயைக் குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தாலும்..." என்கிற போதும்
யாரையோ வைவதாய் பாவனை கொள்கிறேன்
பதைக்கும் மனமடக்கி
"உங்கம்மாளப் போட்டு பறையன் சக்கிலிப் போக..." என்ற வசவுகளின் போது
அதுக்கும் கூட உங்களுக்கு நாங்க தான் வேணுமா என்றும்
சாவு வீடுகளில் வதக்வதக்கென்று
யாராச்சும் ஜதிகெட்டு கொட்டடித்தால்
எங்கப்பனாட்டம் உன்னால அடிச்சி ஆடமுடியுமா என்றும்
கேட்கத்துள்ளும் நாக்கை
எத்தனைசிரமப்பட்டு அடக்கிக்கொள்கிறேன் தெரியுமா
இருப்பினும்,
தடயங்களை அழிக்காமல்
உள்நுழைந்தத் திருடனைப்போல்
என்றாவதொரு நாள் எப்படியேனும்
பிடிபட்டு அவமானப்படும் அச்சத்தில்
உங்களோடு ஒட்டாமல்
ஓட்டுக்குள் ஒடுங்கும் என் புத்தியிலிருந்து
நீங்கள் என்னை
கண்டுபிடிக்கக்கூடும்...
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
நேரம் இப்போது மாலை 4.59 மணி - ஆதவன் தீட்சண்யா
காந்தியைப் பற்றி பேசுவதாயிருந்தால் 1869 அக்டோபர் 2 தொடங்கி 1948 ஜனவரி 30 வரையான காந்தியைப் பேசுங்கள் அதிலும் கவனமாக 1948 ஜனவரி 30 மாலை...
-
வாசல் வெளியீடான "ஆகாயத்தில் எறிந்த கல்" தொகுப்பில் உள்ள இக்கட்டுரை 2008 ஆம் ஆண்டு எழுதப்பட்டது. விஜயகாந்த் அவர்களே, தாங்கள் கட்...
-
மரிச்ஜாப்பி உண்மையில் என்ன நடந்தது? ஹரிலால் நாத் தமிழில் ஞா.சதிஸ்வரன் வெளியீடு: தமிழ் மார்க்ஸ் மற்றும் பாரதி புத்தகாலயம் நான் அப்படியொன்ற...
-
ஆ ரியர் கதைகளில் வரும் ஒரு கதாபாத்திரம் விஸ்வகர்மா. அவர் 4320000 ஆண்டுகளைக் கொண்ட கிருத (1728000 ஆண்டுகள்), திரேத (1296000 ஆண்டுகள்), துவாபர...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக