முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

July, 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மெரீட்டாண்டிகளின் மிரட்டல் - ஆதவன் தீட்சண்யா

மத்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களான தேசிய தொழில்நுட்பக் கழகம் (NIT), இந்திய தொழில்நுட்பக்கழகம் (IIT), இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (IISER) போன்றவற்றில் சேர்வதற்கு நுழைவுத்தேர்வு (IIT-JEE) ஒன்று நடத்தப்படுகிறது. இரண்டு கட்டங்களாக நடைபெறும் இத்தேர்வின் முதல்நிலையில் (Main) தேறுவதே NIT போன்றவற்றில் சேர்வதற்கு போதுமானது. IIT, IISER போன்றவற்றில் சேரவேண்டுமானால் இரண்டாம் கட்டத் தேர்விலும் (Advanced) தேர்ச்சிபெற்றாக வேண்டும்.
நாட்டில் நடைபெறும் நுழைவுத்தேர்வுகளிலேயே மிகக் கடினமானது என்று சொல்லப்படும் இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறுவது எல்லோராலும் முடியாது என்றும் அதற்கு  அபாரமான மூளையும் திறமையும் தகுதியும் தேவை என்றும் இவையெல்லாம் ‘கருவிலே திருவுடைய சில குறிப்பிட்ட சாதியினருக்கு மட்டுமே உரியவை என்றும் ஒரு மாயை பரவியுள்ளது. இந்த மாயையினால்தான் பார்ப்பன விந்தணு (ஐஐடி) என்னும் சரக்கிற்கு சந்தையில் கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. செயற்கை கருவூட்டல் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் தம்பதியர், கூடுதல் விலை கொடுத்தும் காத்திருந்தும் ஐஐடியில் படிக்கும் பார்ப்பனப்பையன்களின் …