முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

February, 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கண்ணிலி - ஆதவன் தீட்சண்யா

காலம் என் கவிதையின் மீது ஒருதுளி ரத்தத்தை பொட்டெனச் சிந்தியது முதலில் இதுவும் ஓர் அலங்காரமெனச் சிலிர்த்தபடி ரத்தத்தின் மேலேயே நான் எழுதிக்கொண்டிருக்கையில் எங்கிருந்தாவதுபதைபதைக்க ஓடிவரும் அது கவிதையின் நிறமே மாறிப்போகுமளவுக்கு ரத்தத்தை ஊற்றிப்போகத் தொடங்கியது உனக்கேது இவ்வளவு ரத்தம் என்றால் பதிலிறுக்காது தலைதெறிக்க ஓடிவிடும் காலம் ஒருநாள் பூமியே பொத்தலாகிப் பெருகிய ரத்தத்தை என் கவிதைக்குள் திருப்பிவிட்டது வாழ்ந்திருக்க வேண்டியவர்களை அவர்களின் ரத்தத்திலிருந்தே உயிர்த்தெழுப்பும் பரிதவிப்பற்று இழியத்தொடங்குகிறது என் கவிதை அழிபாடுகளுக்குப் பின்னான அரசாங்கத்தின் அறிக்கையென.
நன்றி: விகடன் தடம், 2018 பிப்ரவரி 

காவி - கார்ப்பரேட் பயங்கரவாதத்தின் கீழ் கலை இலக்கியம் கருத்துரிமை

காவி - கார்ப்பரேட் பயங்கரவாதத்தின் கீழ் கலை இலக்கியம் கருத்துரிமை
தேசிய முகாம் - பங்கேற்பிற்கான அழைப்பு - 1


2018 ஜனவரி 29, பெங்களூரு டவுன் ஹால். பிற்பகல் 2மணிக்குதான் நிகழ்ச்சி தொடங்கவிருக்கிறது. ஆனால் அதற்கும் முன்பாகவே மக்கள் அரங்கை நிரப்பியிருந்தார்கள். உரிய நேரத்திற்கு வந்தவர்கள் இருக்கைகளின்றி நடைபாதையிலும் ஓரங்களிலும் நெருக்கியடித்து நிற்கத் தொடங்கினார்கள். தளும்பும் உணர்வுகளால் திரண்டிருந்த அவர்களுக்கு இந்த அசௌகரியங்கள் ஒரு பொருட்டல்ல. கவுரி லங்கேஷ் என்கிற கருத்துரிமைப்போராளி சுட்டுக்கொல்லப்பட்ட பிறகு வருகிற அவரது இந்த முதலாவது பிறந்த நாள் நிகழ்வில் பங்கெடுத்து ‘நானே கவுரி, நாம் ஒவ்வொருவரும் கவுரி’ என்கிற முழக்கத்தில் தம் குரலையும் சேர்த்துவிட வேண்டும் என்பதற்காக அவர்கள் நாட்டின் பலபாகங்களிலிருந்தும் வந்திருந்தார்கள்.
டீஸ்டா செடால்வட், ஹெச்.எஸ்.துரைசாமி, கவுரியின் தத்துவார்த்தக் குழந்தைகள் என்று செல்லமாக விளிக்கப்படுகிற ஜிக்னேஷ் மேவானி, கன்னய்யா குமார், ஷீலா ரசீத், உமர் காலித், பிரகாஷ் ராஜ், மருத்துவர் வாசு என்பதான உரையாளர்களின் கலவை இந்திய அரசியல்களத்தின் புதிய நிறக்கோலம் ஒன்றின்…