முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

September, 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சிறைக்காவலருக்கு ஓர் எழுச்சிப் பாடல் - ஜி.என்.சாய்பாபா·

எனது ஆயுள் தண்டனைக் கூண்டிற்குள்
பெரிய சாவிக் கொத்தொனறைத் தட்டி ஓசை எழுப்பியவாறு காலை வணக்கம் என்னும் தழுவலுடன் அதிகாலைக் கனவுகளிலிருந்து என்னை விழித்தெழ வைக்கிறார் அவர் புன்னகையுடனும் சிரிப்புடனும்.
தலையில் கருநீல நேரு தொப்பி மேலிருந்து கீழ் வரை மூர்க்கத்தனமான காக்கி உடைகள் இடுப்பைச் சுற்றிப் பாம்பு போல் வளைந்தோடும்கருப்பு பெல்ட் தூக்கம் கலையாமல், பாதி திறந்திருக்கும் என் கண்களுக்கு முன்நிற்கிறார், தடுமாறுகிறார் நரகத்தின் வாயில்களைக் காத்துக் கொண்டிருக்கும் பேயைப் போல.
பகைவனின் இராணுவத்திலிருந்துவரும் ஓர் ஆவியைப் போன்ற தோற்றம் ஆனால் வாஞ்சையுள்ள புன்னகை, நட்பு நிறைந்த முகம் நாள் விடிந்ததும் அன்று உயிருடன் இருப்பவர் யார், இறந்து போனவர்கள் யார் என்பதை சோதித்துக் கொண்டும் உயிரோடு இருப்பவர்களை எண்ணிக் கொண்டும்.
வலியையோ எரிச்சலையோ வெளிப்படுத்தாமல் ஒவ்வொரு நாளும் ஆயிரம் முறை இரும்புக்கதவுகளின் பூட்டுகளைத் திறக்கிறார், மூடுகிறார். சோர்வடையாத தமது சேவைகளுக்காக இனாமையோ சலுகைகளையோ கேட்பதில்லை . நோய்வாய்ப்பட்டு பிரக்ஞையற்ற நிலையில் நான் இருக்கும் போது கைதிகளைப் பார்க்க வராத மருத்துவரைத்தனது ஒயர்லெஸ் கருவி மூலம் பொறும…