திங்கள், ஜூலை 1

அவிசுவாசம் - ஆதவன் தீட்சண்யா


மோப்பமும் காத்தலுமாகிய
தன் மரபுணர்விலிருந்து 
உற்றறியும் எதையோ
உணர்த்தும் தவிப்பில்
குரைக்கும் நாயை
பலங்கொண்டமட்டும் அதட்டி
உங்களைப் போலவே அதையும்
வாயடக்கி கிடக்கச் செய்கிறீர்கள்
அல்லது
குரைக்கும் நாய் வேட்டைக்குதவாதென
இளக்காரமாய் உதாசீனம் செய்து
ஒருபோதும் குரைத்தேயிராத
அதனாலேயே அது
இலக்கினை குறிவைக்கும் மோனமென வியந்து
உயர்ரக நாயொன்றை வளர்க்கத் தொடங்குகிறீர்கள்
தின்பதற்கன்றி வேறெதற்கும் வாய்திறவாமல்
அவ்வப்போது 
ஒரு வேலையைப் போல
வாலை மட்டும் ஆட்டிக்காட்டும் அதற்கு
பொருத்தமானதொரு செல்லப்பெயரைத் தேடுகிறீர்கள்
வீணிலொரு சொல்லாகக் கிடந்திழியும் 
உங்கள் பெயரையே சூட்டுங்களேன்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நேரம் இப்போது மாலை 4.59 மணி - ஆதவன் தீட்சண்யா

காந்தியைப் பற்றி பேசுவதாயிருந்தால் 1869 அக்டோபர் 2 தொடங்கி 1948 ஜனவரி 30 வரையான காந்தியைப் பேசுங்கள் அதிலும் கவனமாக 1948 ஜனவரி 30 மாலை...