1
உண்மையில்
நான்
இருண்டகாலத்தில்தான் வாழ்கிறேன்.
வஞ்சகமற்ற
சொல் மடமை
கவலைக்கோடுகளற்ற நெற்றியோ
கூருணர்வற்ற மனநிலைக்கான அறிகுறி.
ஒருவன்
சிரிக்கிறான்
கெட்ட
செய்தி எதுவும்
அவன்
காதுக்கு எட்டவில்லை என்பதால்.
என்ன
காலமிது -
மரத்தைப்பற்றிப் பேசுவதுகூடக் குற்றமாகிறது
பிற
கொடுமைகளைப் பேசாது நாம் மௌனம் சாதிப்பதால் -
அதோ
தெருவை அமைதியாகக்
கடந்து செல்லும்
அந்த மனிதன்
தேவைகளுடன்
காத்திருக்கும் நண்பர்கள்
அணுகமுடியாதபடிக்கு
எட்டிச்
சென்றுவிட்டானோ?
எனக்கு,
இன்னமும்
பிழைக்க
வழி இருக்கிறது
உண்மைதான்.
ஆனால்,
பாருங்கள்,
இது
ஒரு தற்செயல் நிகழ்வே
நான்
செய்யும் எதுவும்
வயிறு
முட்ட உண்ணும் உரிமையை
எனக்கு
வழங்கவில்லை.
விதிவசமாக
எனக்கு ஏதும் நிகழவில்லை
ஆனால்
அதிர்ஷடம் தப்பினால்
நானும்
காணாமல் போய்விடுவேன்
அவர்கள்
சொல்கிறார்கள் -
சாப்பிடு,
குடி
இவையாவது இருக்கிறதே
என்று
சந்தோஷப்படு.
ஆனால்
நான் உண்ணும் உணவு
பசித்தவரிடமிருந்து பறிக்கப்பட்டதாக இருக்குமானால்
நான்
குடிக்கும் ஒரு குவளைத் தண்ணீர்
தாகத்தால்
தவித்து சாகவிருக்கும்
ஒருவரிடமிருந்து பிடுங்கப்பட்டதாக இருக்குமானால்
நான்
எப்படி உண்பது, குடிப்பது?
இருந்தாலும்
நான்
உண்கிறேன், குடிக்கிறேன்.
நான்
விவேகியாக இருக்க விரும்புகிறேன்
பழைய
நூல்களில் விவேகம் இவ்வாறு விளக்கப்படுகிறது:
உலகை
உலுக்கும் சண்டைகளைத் துறந்து
கொடுக்கப்பட்டுள்ள
அற்பக்காலத்தை
பயமின்றிக்
கழி
அடுத்து,
வன்முறையின்றி வாழ்க்கையை வாழப்பார்
தீயது
நடந்தாலும் நல்லதையே திரும்பச்
செய்,
ஆசாபாசங்களை நிறைவேற்றப் பார்க்காதே
அவற்றை
மறந்துவிடு
2
கலகக்காலத்தில்
நான்
நகரங்களை வந்தடைந்தேன்.
கலகம்
செய்யும் மனிதர்களிடையே
வந்து
சேர்ந்தேன்
அவர்களுடன்
சேர்ந்து
நானும்
கலகம் செய்தேன்.
இந்த
பூமியில் வழங்கப்பட்ட காலத்தை
இவ்வாறு
கழித்தேன்.
போர்களுக்கு
இடையே
உணவு
உண்டேன்
கொலைகாரர்களுக்கு
அருகே
படுத்துறங்கினேன்.
அக்கறையற்ற
வகையில்
காதலித்தேன்
பொறுமையின்றி
இயற்கையை அணுகினேன்
இப்படியாகவே
இந்த
பூமியில்
எனக்கு
வழங்கப்பட்டகாலத்தைக் கழித்தேன்
எனது
காலத்தில்
எல்லாப்பாதைகளும் சகதிக்கே இட்டுச் சென்றன
எனது
நாக்கு
கொலையாளிகளிடம் என்னைக் காட்டிக் கொடுத்தது
என்னால்
பெரிதாக எதையும் செய்ய முடியவில்லை
ஆனால்
நான்
இல்லாததால்
அதிகாரத்தில் உள்ளவர்கள்
மேலும்
பாதுகாப்புடன் இருந்தனர் -
இதை
நான் நம்பினேன்.
இப்படியாகவே
இந்த
பூமியில்
எனக்கு
வழங்கப்பட்ட காலத்தைக் கழித்தேன்
நமது
இலக்கு வெகுதொலைவில்
ஆனால்
தெளிவாகத் தெரிகிறது
ஆனால்
என்னால் அங்கு
சென்றடைய
முடியும் என்று தோன்றவில்லை
இப்படியாகவே
இந்த
பூமியில்
எனக்கு
வழங்கப்பட்ட காலத்தைக் கழித்தேன்
3
எங்களை
அடித்துச் சென்ற
வெள்ளத்திலிருந்து
தப்பி வரவிருக்கும் நீங்கள்
எங்களின்
தோல்விகளைப்பற்றிப் பேசுகையில்
நீங்கள்
தப்பிக்க நேரிட்ட
அந்த
இருண்ட காலத்தையும்
சேர்த்துப் பேசுங்கள்
காலணிகளை
அடிக்கடி மாற்றிக்கொள்வதைப் போல
ஏன்
அதைவிட அதிகமாக -
வர்க்கப்
போர்களினூடாக -
நாங்கள்
அடிக்கடி நாடுகள் மாறினோம்.
கலகங்கள் நடவாமல்
அநீதி
மட்டுமே எஞ்சியிருக்க
துக்கமுற்றோம்.
ஆனாலும்
எங்களுக்குத் தெரியும்
வெறுப்பு,
ஏன் சிறுமையுங்கூட
முக
அமைப்பை மாற்றும் என்று
கோபம்
அது
அநீதிக்கு எதிரானதாக இருந்தாலும்
குரலைக் கரகரப்பாக்கும் என்று,
தோழமை
தழைப்பதற்காக
இந்த
மண்ணைப் பண்படுத்த விரும்பிய
எங்களால்
நட்புணர்வுடன்
இருக்க
இயலவில்லை.
ஆனால்,
நீங்கள்
மனிதனுக்கு
மனிதன்
சகாயமானவனாக இருக்கக்கூடிய
காலம்
வரும்போது
எங்களை
அருளிரக்கத்துடன்
ஆங்கிலம் வழி தமிழில் : வ.கீதா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக