வியாழன், ஜூலை 23

கனம் கோர்ட்டார் அவர்களே, உங்களது பொன்னான நேரத்தை இனி வீணடிக்கமாட்டோம்.. ஆதவன் தீட்சண்யா



மகாபிரபு ஜகன்னாத்" என்ற படம் நாடுமுழுவதும் 2026 ஜூலை 17 ஆம் தேதி வெளியாகவிருந்த நிலையில், ஸ்கந்த புராணத்தில் சொல்லப்பட்டிருப்பதற்கு மாறாக படம் இருப்பதாக குற்றம்சாட்டி தொடுக்கப்பட்ட ஒரு வழக்கில், ஜூலை 15 ஆம் தேதி ஒடிஷா உயர் நீதிமன்றம் படத்தை வெளியிடத் தடை விதிக்கிறது. 

மறுநாள் (ஜூலை 16) அந்தப் படத்தயாரிப்பு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்கிறது. அதை அவசர வழக்காக கருதி அன்றைக்கே விசாரிக்கும்படி கோருகிறது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியும் உள்ளடங்கிய அமர்வு அடுத்தநாள் (ஜூலை 17) காலையில் முதல் வழக்காக எடுத்து விசாரித்து சுடச்சுட தீர்ப்பளிப்பதாகச் சொல்லி ஆற்றுப்படுத்துகிறது. (தி இந்து, 2026 ஜூலை 17). 

இதுபோன்ற தேசிய அதிமுக்கியத்துவம் வாய்ந்த உன்னத வழக்குகளை அவசரமாக விசாரிப்பதற்காக மட்டுமே தனது பொன்னான/பிளாட்டினமான/ வைரவைடூரியமான நேரத்தைச் செலவிடக்கூடியவர் நமது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி. அவரிடம் போய், தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக டெல்லியில் போராடிவரும் மாணவர்கள் மீது காவல்துறை நடத்திவரும் கொடிய தாக்குதல் என்கிற அற்ப விசயம் பற்றி முறையிடுவது என்ன நியாயம்?. அந்த எரிச்சலில்தான் "எங்களது நேரத்தை வீணடிக்காதீர், தாக்குதல் பற்றிய வீடியோக்களையும்  நாங்கள் பார்க்க விரும்பவில்லை" என்று சீறியிருக்கிறார். இனிமேலாவது அவருக்கேற்ற முறையீடுகளுடன் அவரிடம் செல்லுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கனம் கோர்ட்டார் அவர்களே, உங்களது பொன்னான நேரத்தை இனி வீணடிக்கமாட்டோம்.. ஆதவன் தீட்சண்யா

மகாபிரபு ஜகன்னாத்" என்ற படம் நாடுமுழுவதும் 2026 ஜூலை 17 ஆம் தேதி வெளியாகவிருந்த நிலையில், ஸ்கந்த புராணத்தில் சொல்லப்பட்டிருப்பதற்கு மாற...