சனி, ஜனவரி 14

பயணம் -ஆதவன் தீட்சண்யா

மதளத்தில் முகடுகளில்
காற்றுவெளியில்
கடல்நீர்ப்பரப்பில்
நரம்பென கிளைக்கும்
தடங்கள் வழியே
கொடிவழி நேர்வழி
தனிவழி பொதுவழி
விதிவழி புதுவழி
சஞ்சாரம்
வண்டிவாகனத்தில்
குதிரையில் கழுதையில்
கொழுப்பெடுத்து யானையில்
ரதத்தில் பல்லக்கில்
அடுத்தவன் தோளில்
சொந்தக்காலில்
கனவில் நனவில்
கால்பாவாக் கற்பனையில்
  
பயணம் :2

விலாசம் தொலைத்து
வெளிப்போய்
மூளை சிதறி
முகமும் சிதைந்து
விபத்து விபரப் பலகை நிரப்ப
அகாலத்தில் மரணித்தவர்
இங்கு
தேவையற்ற தகவலாய்...

என்ன இருக்கிறது
கடிகார முட்கள் கூடும்
கணமேனும் ஓயாமல்
போக்கற்றுத் திரிந்து
பொட்டென்று சாவதில்

மார்க்கமறிந்து
சூட்சுமம் தேர்ந்து
லாவகமாய் ஒதுங்கி
முன்பாய்ந்து அம்பென
இலக்கடையும்
சாதுர்யத்தில்தான் எல்லாமே.2 கருத்துகள்:

  1. நல்ல கவிதை .வாழ்த்துக்கள்.
    சமவெளிமுகடுகளில் நடக்கும் பயணங்களே ந்ம் மனதிற்கு உகந்த்தாய் இருந்திருக்கிறது இதுவரை /
    அப்படியே பழகியும்,வாழ்ந்தும் வந்து விட்ட சமூகப்பெருவெளி சாதுர்யங்களின் சங்கடங்களிலும்,நைச்சியத்தனதிலும் இன்னும்,இன்னுமாகவும்/

    பதிலளிநீக்கு

பார்ப்பரேட்டிய காலத்தில் கல்வி - ஆதவன் தீட்சண்யா

  2021 ஏப் 14 அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளன்று சென்னையில் பொதுப்பள்ளிக்கான மாநில மேடை நடத்திய “மாநிலக் கல்விக்கொள்கை உருவாக்கம்” கருத்தரங்கில...