முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

May, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கடலளவு மலையளவு பணிகள் காத்திருக்கின்றன, கடுகளவேனும் செய்துகொண்டிருக்கிறோமா? - ஆதவன் தீட்சண்யா

ஒசூரில் நடக்கும் இலக்கிய நிகழ்வுகளுக்கு பெங்களூரிலிருந்து வந்துபோகும் ஒருவராக அறிமுகமாகி பின்னாட்களில் தோழமையின் உருவகம் போல மாறிப்போன தோழர். அசோகன் முத்துசாமி அவர்களின் நினைவு நாளில் உரையாற்றும் கெடுவாய்ப்பை இயற்கை எனக்கு வழங்கியிருக்கிறது.தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் ஊழியர்கள் என்ற முறையிலும் கலை இலக்கியம் சார்ந்த நடவடிக்கைகளிலும் அவரோடு இணைந்து பணியாற்றிய அனுபவங்களின் நினைவுகளால் தத்தளிக்கும் உங்களின் நிலையிலேயே நானும் இருக்கிறேன். சாதியின் சிற்றலகான குடும்பமும், குடும்பங்களின் தொகுப்பான சாதியும் உண்டாக்கித் தருகிற ரத்த உறவுகளுக்கு அப்பால் பரந்து விரிந்திருக்கிற இம்மானுடச் சமூகத்துடன் கலந்துறவாடிய அவருக்கு புதிய உறவுகளாக வாய்த்த தோழர்களும் நண்பர்களும் குழுமியுள்ள இந்த அவை பொருத்தமான அஞ்சலியை இவ்வேளையில் தெரிவித்துக் கொண்டிருக்கிறது. ஒரு முழுநேரப் புரட்சியாளருக்குரிய விழிப்பு மனநிலையுடனும் செயல் வேகத்துடனும் தன்னை வெளிப்படுத்திக் கொள்வதற்கான அவரது எத்தனங்கள் கைகூடுவதற்கு காலம் அனுமதிக்கவில்லை.ஆயினும் இறந்தவரைப் பற்றி நல்லவிதமாக விதந்துரைக்க வேண்டும் என்கிற ச…

சட்டம் தன் கொடுமையைச் செய்து கொண்டேயிருக்கிறது- புதுவிசை 43வது இதழின் காலங்கம்

அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றி, பண்பாட்டுத் தனித்துவங்களை பேணிக்காத்து, சமூகப் பாதுகாப்புடன் கூடிய கண்ணியமான வாழ்வை குடிமக்களுக்கு உறுதி செய்திடும் ஒரு சேமநல அரசை நடத்தப்போவதாய் வாக்களிக்கப்பட்ட இந்த நாட்டில் அதற்கு நேரெதிரான அரசே நீடிக்கிறது. தாராளமயமாக்கலுக்குப் பிறகோ அரசானது பெயரளவிலான மேற்பூச்சுகளைக்கூட உதிர்த்துவிட்டு இந்திய அந்நிய முதலாளிகளின் கொடிய சுரண்டலுக்கு உகந்ததாக சட்டங்களை மாற்றியும் இயற்றியும் அவற்றின்கீழ் நாட்டையும் மக்களையும் அடக்கி ஒடுக்கும் நிலையை அப்பட்டமாக வெளிப்படுத்தியது.

சாதிய முன்னுரிமைகளாலும் காலனிய ஆட்சியாளர்களை நத்திப் பிழைத்தும் உருவான இந்திய ஆளும் வர்க்கம், சுதந்திரத்திற்குப் பின்னான புத்தெழுச்சியை உறிஞ்சி வளர்ந்ததொரு விதமென்றால் கால்நூற்றாண்டு கால தாராளமய மாக்கலால் ஊட்டமுற்று பெரும் கார்ப்பரேட்டுகளாக கொழுத்துள்ளது மற்றொரு விதம். தமது சொந்த சுரண்டல் நலனை முன்னிட்டு அந்நிய நிதி மூலதனங்களோடுச் சேர்ந்து நாட்டை மறுகாலனிய ஆதிக்கத்திற்குள் மூழ்கடித்து வரும் அவர்களுக்கு இப்போது தேவைப்படுவது மக்களை அடிமைகளைப்போல ஒடுக்கி வைக்கிற ஒரு சர்வாதிகார அரசு.

சுதந்திர உணர்வ…