வியாழன், செப்டம்பர் 17

துக்க விதி 2015 - ஆதவன் தீட்சண்யா


ழுகைக்கான கால அளவு
அழுகைக்குப் பிறகான விசும்பல் நீடிக்கும் நேரம்
பொது அமைதிக்கு குந்தகம் நேராவண்ணம்
ஒலி குறுக்கி கதறுவதற்கான உறுதிமொழி
உடன் அழுவோரின்
அங்க அடையாளங்கள் மற்றும் தேசிய அடையாள எண்
அழுகை வரி செலுத்தியதற்கான ஒப்புகைச்சீட்டு
அழுகைக்கூடத்தில் புழங்குவதற்கான அனுமதியின் நகல்
சாத்வீகத்தை நிலைநிறுத்த போலிஸ் உதைக்குமானால்
தாங்குவதற்கான உடலுறுதிச்சான்று என
நடப்பிலுள்ள விதிகளனைத்தையும் அனுசரித்து
நிரப்பப்பட்டிருந்தும்
உன் மரணத்தின் பொருட்டு அழுவதற்கான
எனது விண்ணப்பத்தை
கிடப்பில் போட்டுவைத்திருக்கிறது அரசாங்கம்

ஒப்பாரியில் தெறிக்கும் வாசகங்களுக்கு
ஒப்புதல் பெற வேண்டும் என்கிற
அதன் பிடிவாதத்துக்கும்
அழும்போது குறித்துக்கொள் என்னும்
தன்மானத்துக்கும் இடையில்
உனக்காக உகுக்கத் திரண்ட கண்ணீர்
இந்தக் கவிதையை எழுதி முடித்திருக்கிறது.
புதுவிசை - செப் 2015






1 கருத்து:

  1. உரிமை பறிக்கப்பட்ட சூழலில் வாழும் இருப்பைச்
    சொல்லும் சொல் சூழலை கொதிக்கச் செய்யட்டும்

    பதிலளிநீக்கு

இராமனின் அயோத்தி - பேராசிரியர் விவேக் குமார்

ஒரு முஸ்லீம் ஜமீன்தாரால் அயோத்தியில் நன்கொடையாகக் கொடுக்கப்பட்ட நிலத்தில் கட்டப்பட்டிருந்த 300 ஆண்டுகள் பழமையான இந்த ஜன்மஸ்தான் கோயில்,  புத...