முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

August, 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தர்க்கம் அற்ற கதை - ஆதவன் தீட்சண்யா

‘உங்களைப் பின்தொடர்ந்ததில் கிடைத்த இந்தக் கதையை இப்பதான் முடிச்சேன். யாராவதொருத்தர் படிச்சுப் பார்த்து சரியா வந்திருக்கான்னு சொல்ல முடியுமா?

ஏய் பாகீரதி, தொடப்பத்த அப்படி ஓரமா போட்டுட்டு இதை வாங்கி சத்தமா படி. நாங்களும் கேட்கிறோம் என்றாள் அபிதா. அய்யய்யோ, நான் ஸான்ஸ்கிரிட்ல படிச்சதால எனக்கு தமிழ்ல அவ்வளவா படிக்க வராது. நீ படியேன்டி என்று கிரிஜாவிடம் தள்ளிவிட்டாள் பாகீரதி. ஏய்,  ஹவ் கேன் ஐ...  செகண்ட் லாங்வேஜ் ஜெர்மன் படிச்ச நான் எப்படிடி தமிழ்ல படிப்பேன் என்று கிரிஜாவும் நழுவிவிட அபிராமி வெடுக்கெனப் பிடுங்கி படிக்கத் தொடங்குகிறாள். நீங்களும் கேளுங்கள்.
*** ‘யோவ் எழுத்தாளரே, நீ எழுதப்போற இந்தக் கதையில நாங்க யார்? ‘தூய்மைப் பணியாளர்’ ‘ஓ... இப்படி தூயத்தமிழ்ல சொன்னா தொடப்ப வேலை மாறிடுமா?’ ‘அதெப்படி மாறும்?’ ‘கதையில கூட எங்களுக்கு வேற வேலை தரமாட்டே?’ ‘கதையில மாற்றி எழுதிட்டா நிஜத்துல மாறிடுமா?’ ‘நிஜத்த மாத்துற மாதிரி கதைய எழுத உனக்கு ஏலாதுன்னு சொல்லு.’ ‘அடியே, வேலை நேரத்துல எதுக்குடி அந்தாளோட வீண் பேச்சு?’ ‘நீ போடா தம்பி, போய் ஒரு ஓரமா என்னமாச்சும் கிறுக்கிக்கிட்டு கிட...’ ‘ஆமா, தோகை விரிச்ச மயி…

ஆஹா ஓஹோ ஆய்வுகளுக்கு அணுகவும்: தமிழ் இந்து - ஆதவன் தீட்சண்யா

வெற்றி பெற்றவன் சொல்வதை உண்மைதானா என்று சோதித்துப் பார்க்க ஒருவரும் துணியமாட்டார் என்று ஹிட்லர் சொன்னதாக ஒரு செய்தியை கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் செய்தித்தாளே உண்டு என்பதை இப்போதுதான் தமிழ் இந்து மூலமாக அறிகிறேன்.
தமிழ் இந்துவில் வெளியாகும் கட்டுரைகள் எந்தளவுக்கு ஆய்வுப்பூர்வமானவை என்கிற கேள்வி வாஞ்சிநாதன் விசயத்தில் சந்தி சிரிக்கிறது. இதற்கு முன் கடந்த 03.08.2017 அன்று வெளியான "வீரத்தால் வெற்றி கொள்ளமுடியாத வீரன்: தீரன் சின்னமலை" http://tamil.thehindu.com/opinion/blogs/article19413439.ece என்ற கட்டுரையிலும் இப்படியான தகவல் பிழைகளைக் காணமுடியும்.
//1790களின் பிற்பகுதியில் சித்தேசுவரம், மழவல்லி, சீரங்கப்பட்டிணம் ஆகிய மூன்று இடங்களிலும் சின்னமலை, திப்பு சுல்தான் கூட்டணி ஆங்கிலேயருடன் மோதியது. அதில் ஆங்கிலேயர்களின் படைகளுக்குப் பெருத்த சேதத்தை விளைவித்து, வெற்றிவாகையும் சூடியது.// என்கிறார் கட்டுரையாளர் க.சே.ரமணி பிரபா தேவி.
1790களின் பிற்பகுதி என்பதால் 1799ல் நடந்த நான்காம் ஆங்கிலோ -மைசூர் போரையே இக்கட்டுரை குறிப்பதாக கொள்ளலாம். சித்தேஸ்வரத்தில் 1799 மார்ச் 6 அன்றும், 1799 …

காமிய தேசத்தில் ஒருநாள் - ஆதவன் தீட்சண்யா

அதிகாலை 2.31 மணி. அதிகாரப்பூர்வமாககண்விழிப்பதற்கானஅலாரம்ஒலிப்பதற்குஇன்னும் 29 நிமிடங்களிருந்தன. அதற்குள்ளாகவேஅவனுக்குவிழிப்புவந்துவிட்டது. விழித்ததுமேஅவனுக்குஎழுந்தமுதல்சந்தேகம், தூங்கினோமாஎன்பதுதான். இமைகளின்உட்புறத்தில்கங்குமூட்டிதீய்ப்பதுபோலகண்களில்அப்படியொருஎரிவு. தூக்கத்தின்போதாமை, உடலெங்கும்