முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

June, 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இடதுசாரிகளின் முன்னேற்றம் - ஆதவன் தீட்சண்யா

மதவாதம் - மதவாததுக்கு எதிரான மனநிலை பெருகிவரும் இந்தச் சூழலில், இடதுசாரிகள் தீவிரமாக இயங்கியிருக்க வேண்டும்; வலுவானவர்களாக மாறியிருக்க வேண்டும். ஆனால், இரண்டிலும் நம்பிக்கை தென்படவில்லையே?
பதற்றமும் பகையுணர்ச்சியும் மிக்கதாக சமூகத்தை பிளவுபடுத்தி அதிகாரத்தை கைப்பற்றுவதற்குரிய உதவிகளை சங்பரிவாரத்திற்கு -தனது வர்க்கநலனுக்காக- வழங்கிவரும் கார்ப்பரேட்டியம், பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததை தன் சொந்த வெற்றியாக பார்க்கிறது. அது, நாட்டின் வளங்களையும் பொதுச்சொத்துக்களையும் மக்களின் உழைப்புச்சக்தியையும் தங்குதடையின்றி சுரண்டிக் கொழுக்க பாதுகாப்பளிக்கும் அடியாள்படையாக சங்பரிவாரத்தையும் மத்திய அரசையும் பயன்படுத்துகிறது.
காவி பயங்கரவாதமும் கார்ப்பரேட் பயங்கரவாதமும் ஒன்றெனக்கூடிய இந்திய வகைப்பட்ட பாசிச அரசானது, குடிமக்களின் தனிப்பட்ட வாழ்வு, நாட்டின் மாண்புகள், சமூகம் தன்னை நிர்வகித்துக் கொள்வதற்கென வரலாற்றுப்போக்கிலும் அரசியல் சாசனப்படியும் உருவாக்கிக்கொண்ட நிறுவனங்கள் ஆகியவற்றில் நேரடியாக தலையிட்டு கட்டுப்படுத்த முயற்சிக்கிறது. மாணவர்கள், வணிகர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எனச்…

ஜாக்கிரதை - செங்கருநீலன்

எதிரி ஏந்தியிருப்பதினும்
வலியதும் நவீனமானதுமென்று
நான் ஏந்தியிருப்பதோ
ஜிகினாத்தாள் சுற்றிய அட்டைக்கத்தி

காற்றில் சுழற்றினும் கைப்பிடி உடையும்
உறையுள் செருகினும் முனையது மழுங்கும்
சாணை பிடிக்கவே ஏலாக்கத்தி
சண்டை பிடிப்பது எங்ஙனம்

உக்கிரமாக சத்தம் எழுப்பி
யுத்தம் போலே தோற்றம் கிளப்பி
கத்தியைக் காப்பதே லட்சியமாகுது
கபடம் பூசிய ஜிகினா மினுங்குது.

தகதகத்தொளிரும் கத்தியைக் கண்டு
தப்பியோடி பதுங்கினர் எதிரிகள்
என்னுடன் போரிடும் இழிவினைச் சுமக்க
இனியெவரேனும் களத்தினிலுண்டா?