ஞாயிறு, அக்டோபர் 11

ஒன்னும் பேசாதவங்க ஊர்ல உளறுவாயன் ராசா – ஆதவன் தீட்சண்யா

முன்னுக்கு வருகிற பிரச்னைகள் மீது எல்லோரும் ஆளாளுக்கு ஏதாவது சொன்னது போக அறுதியான உண்மை என்கிற ஒன்று இருக்குமல்லவா, அதை நான்தான் சொல்லப்போகிறேன் என்பது போல எழுதுவது ஜெயமோகனின் வாடிக்கை. விட்டுப்போன மிச்சம்மீதிகளை கலந்துக்கட்டி ஏதாவது சொல்வதற்கு சால்ஜாப்பாக ‘உடனடியாய் கருத்து சொல்வதில் எப்போதும் தயங்குகிறவன்’ என்று மிகுந்த அடக்கத்தோடு தன்னைத்தானே புகழ்ந்து கொள்ளவும் தயங்கமாட்டார். உடனே, முன்னணி எழுத்தாளர்களெல்லாம் மூடிக்கொண்டிருக்கும் போது (வாயைத்தான்) இவராவது வாய் திறந்து அருளியிருக்கிறார் பார்த்தீர்களா என்று சிலர் குதியாளம் போடுவார்கள். ஆனால் இவர் திறப்பது வாய்தானா என்று சந்தேகிக்கும்படியாக அவ்வளவு துர்நாற்றம்.  

ஓலைப்பாயில் ஒன்னுக்கடித்தாற் போல எப்போதும் லொடலொடவென ஏதாவது இவர் பேசிக்கொண்டேயிருப்பதால் அவற்றுக்குள் போய் பார்ப்பதற்கு பலரும் அலுப்படைந்துவிடுகிறார்கள். அவற்றில் நிரம்பியிருக்கும் பொய்களுக்கும் பிழைகளுக்கும் விஷமங்களுக்கும் பதில் சொல்லிக் கொண்டிருந்தால் நாம் வேறுவேலையே பார்க்க முடியாது என்பதாலும்கூட கடந்துபோய்விடுகிறார்கள். சிலரோ, வாய்வைக்காத இடமே இல்லை என்னுமளவுக்கு எல்லாவற்றைப் பற்றியும் எழுதுவதால் அவர் முக்கியமான ஆளுமை என்று  பாரட்டக் கிளம்பிவிடுகிறார்கள். இப்படியான சூழலால் உற்சாகம் பெற்றுள்ள ஜெயமோகனுக்கு, மாற்றுக்குறைவான உண்மைகளை தான் ஒருபோதும் பேசுவதில்லை என்று பீற்றிக்கொண்டே புளுகித் திரிவது சுளுவாகிப் போய்விடுகிறது. இவ்வாறு சொல்வதற்கு அவரது சமீபத்திய இரண்டு கட்டுரைகளேகூட போதுமான ஆதாரங்கள். 

1. எம்.எம்.கல்புர்கி கொல்லப்பட்ட போது கடும் கொந்தளிப்போடு இவர் கட்டுரை ஒன்றை (செப்-1) எழுதியிருப்பதாக நண்பர்கள் சிலர் தெரிவித்தனர். நியாயமாகப் பார்த்தால் கல்புர்கி கொலைக்காக சந்தோசப்படக்கூடிய இந்த ஆள் எதற்காக ஆவேசப்படணும் என்கிற சந்தேகத்தோடு அதை படித்தேன். ஆமாம், சந்தேகத்தோடுதான் படித்தேன். என் சந்தேகம் வீண்போகவில்லை. அறச்சீற்றம் பொங்கி அண்டா அண்டாவாய் வழியும் அந்தக் கட்டுரைக்கு நடுவில் அவரது இந்துத்துவ திருகுதாள வேலை ஈஈயென பல்லிளித்தது. மேலும் கீழும் நடப்பியல் உண்மைகளை அடுக்கி அவற்றுக்கு நடுவே ‘கர்நாடகத்தின் மிகப்பெரிய சீர்திருத்தவாதியான பசவண்ணர் இந்துமதத்திற்குள் உருவாக்கிய ஒரு துணைமதம் வீரசைவம்...’ என்கிற வரலாற்றுப்பொய்யைச் சொருகியிருக்கிறார்.  இந்தப் பொய்யை அவரே புனைந்தாரா அல்லது 2007 ஆம் ஆண்டு காலச்சுவடு இதழில் ‘கர்நாடகத்தில் வீரசைவம் இந்து மதத்தின் ஒரு பெரும்பான்மைப் பிரிவு’ என்று நஞ்சுண்டன் எழுதியிருந்ததை இரவலாகப் பெற்றாரா என்பது தெரியவில்லை. 

‘அன்பார்ந்த ஜெ, உப்பு ஏன் உவர்க்கிறது புளி என் புளிக்கிறது? என்பது போன்ற அறிவார்ந்த கேள்விகளை ஓயாமல் கேட்டு தெளிவு பெறுவதையே தொழிலாகக் கொண்ட வாசகர்கள் யாரும், பசவண்ணரின் காலமாகிய 12 ஆம் நூற்றாண்டில் இந்துமதம் என்கிற ஒன்று இருந்ததா? குறைந்தபட்சம் இந்து என்கிற சொல்லேனும் புழக்கத்தில் இருந்ததா? என்கிற கேள்விகளை ஏனோ எழுப்பவில்லை. வேதவழிப்பட்ட பார்ப்பனீயத்தின் அட்டூழியங்களையும் சடங்குகளையும் சாதியப் பாகுபாடுகளையும் எதிர்த்து உருவான ஒரு இயக்கத்தை சந்தடிசாக்கில் இந்துமதத்தின் பொந்துக்குள் திணிக்கும் இந்துத்வ மோசடிக்காகத்தான் இந்தக் கட்டுரை எழுதப்பட்டுள்ளது. வீரசைவம் இந்துமதத்தின் ஒருபகுதியல்ல என்கிற வரலாற்று உண்மையைச் சொன்னதற்காக முதல்முறையாக கொல்லப்பட்ட கல்புர்கிக்கு அஞ்சலி செய்வதாக ஏமாற்றி மறுபடியும் அவரை கொன்றிருக்கிறார் கருணைவான் ஜெயமோகன். திரிசூலத்தை ஒருசூலமாக்கி எழுதுகிறவரால் இதற்கும் குறைவான வன்மத்தை வெளிப்படுத்த  முடியாதுதான்.

2. காவல் துறையினரின் வாக்குமூலத்தை மட்டுமே மையப்படுத்தி பிபிஸி ஹிந்திப்பதிப்பில் எழுதப்பட்டிருந்த செய்திக்குறிப்பை ஆதாரமாகக் கொண்டு ‘நொய்டாவில் நிர்வாணம்’ என்றொரு கட்டுரையை (அக்-10) எழுதியிருக்கிறார் ஜெயமோகன். ‘பிபிஸி ஆதாரப்பூர்வமாக செய்தி’ வெளியிட்டிருக்கிறது என்று நம்பிவிட்ட பிறகு, அங்கு போய்வந்த உண்மை அறியும் குழுவின் அறிக்கையையோ, தலித் அமைப்புகளின் முறையீடுகளையோ பொருட்படுத்த வேண்டிய தேவை அவருக்கு உருவாகவில்லை. (வேண்டுமானால் குறித்து வைத்துக்கொள்ளுங்கள், உண்மையறியும் குழுக்களின் நோக்கங்களை அவமதித்து அவர் விரைவில் கட்டுரையொன்றை எழுத வாய்ப்பிருக்கிறது). இந்திய எதிரிகளிடமிருந்து நாட்டைக் காப்பாற்றுவதில் விஜயகாந்த் மற்றும் அர்ஜூனை முந்திக்கொண்டு ஓடும் தேஷ்பக்தர் ஜெயமோகன் என்கிற உலகறிந்த விசயத்திற்கொப்ப, இணையவெளியில் உலவும் ‘இந்திய எதிர்ப்பு கும்பல்’ நொய்டா விசயத்தை சாக்கிட்டு மேற்கொண்டுள்ள இந்திய எதிர்ப்புப் பிரச்சாரத்தை முறியடிக்கும் வரலாற்றுக் கடமையை நிறைவேற்றும் வரிகளை  எழுதியுள்ளார்: ‘மிகையுணர்ச்சிக் கொந்தளிப்பாக தேசத்தையும் இந்து மதத்தையும் வசைபாடுவதற்கு ஒரு தருணம் தேவை, அவ்வளவுதான்.’ அவங்காயாவும் அப்பனும்  கஷ்டப்பட்டு உருவாக்கிக் கொடுத்திருக்கிற நாட்டைக் காப்பாத்தணும் என்று அவரது புஜம் துடிப்பதில் நமக்கொன்றும் ஆட்சேபணையில்லை. ஆனால் அவர் அடுத்தடுத்துப் பேசும் பொய்களை கவனியுங்கள். 

அ. நொய்டா தன்கர் சம்பவம் நடந்தது 07.10.2015 அன்று. இவர் 10.10.2015 அன்று எழுதும் கட்டுரையில் குறிப்பிடுகிறார் - ‘இது நடந்து சில காலம் ஆகிறது’ என்று. எவ்வளவு காலம் இருக்கும் ஜெயமோகன்? கி.மு.வா அல்லது கி.பி.யா என்று கேட்டால் உங்களுக்கு பிடிக்காது. மகாபாரதத்துக்கு முந்தியா பிந்தியா? என்பதையாவது சொல்லுங்கள். 

ஆ. ‘இந்தியாவெங்கும் குற்றவாளிகள் போலீஸை எதிர்கொள்ளும் ஒரு வழிமுறை உண்டு, தங்கள் வீட்டு ஆண்களை போலீஸ் கைதுசெய்ய வந்தால் பெண்கள் தங்களை நிர்வாணமாக்கிக் கொள்வார்கள். போலீஸுக்கு எதிராக வந்து நின்று தடுப்பார்கள். கற்பழிப்பு போன்ற குற்றச்சாட்டு எழும் என்பதனால் போலீஸ் பின்வாங்கிவிடும்.’ சாராயக்கேஸ் பிடிக்கப்போன வடிவேல் அம்மணக்கட்டையாய் மாறும் காட்சியிலிருந்து இரவல் பெற்று எழுதப்பட்ட இவ்வரிகளில் இருக்கும் வக்கிரத்தை கவனியுங்கள். புகார் கொடுக்கப் போன சுனில் கவுதம் குடும்பத்தாரைப் பற்றி எழுதும் போது, இந்தியாவெங்கும் குற்றவாளிகள் போலீஸை எதிர்கொள்ளும் வழிமுறையைப் பற்றி குறிப்பிட வேண்டிய தேவை என்ன வந்தது? ஒருவேளை சுனில் கவுதமும் அவரது குடும்பத்தாரும் குற்றவாளிகள் என்று சொல்லும் ஆசையைத்தான் சுற்றிவளைத்து வெளிப்படுத்துகிறாரா? போலிஸாரின் பூட்ஸை நக்கிப் பிழைப்பதில் இதுவொரு புது “அறம்” போலும். 

இ. ‘தருமபுரி, ஓசூர் மாவட்டங்களில் திருட்டை தொழிலாகக் கொண்டவர்களின் கிராமங்களில் இவ்வழக்கம் உண்டு. எப்போதுமே பெண்போலீஸுடன் மட்டுமே போலீஸ் அங்கே நுழைய முடியும். ஒருமுறை நிர்வாணமாக நின்றபடி போலீஸ் மேல் கல்வீசும் பெண்களை நானே கண்டிருக்கிறேன்.’ இந்த மூன்றுவரிகளுக்குள் தான் எத்தனை பொய்கள்… தமிழகத்தின் 33வது மாவட்டமாக ஒசூரை அந்த ஜெ அறிவிக்காவிட்டால் என்ன, இந்த ஜெ அறிவித்திருக்கிறார். ஒசூர் வட்டமா மாவட்டமா என்பதைகூட  தெரிந்து கொள்ளாத இந்த எல்லாம் தெரிந்த ஏகாம்பரம், தருமபுரி, ஓசூர் மாவட்டங்களில் திருட்டை தொழிலாகக் கொண்டவர்களின் கிராமங்களில் இவ்வழக்கம் அதாவது- தங்கள் வீட்டு ஆண்களை போலீஸ் கைதுசெய்ய வந்தால் பெண்கள் தங்களைத்தாங்களே  நிர்வாணமாக்கிக் கொள்ளும் வழக்கம் உண்டு என்று எழுதுகிறார். 

அரைநூற்றாண்டு காலமாக தருமபுரி, ஒசூர் பகுதிகளில் வாழ்ந்துவரும் எனக்கு தெரிந்து தருமபுரி மற்றும் ஒசூர் இடம் பெற்றுள்ள கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ‘திருட்டை தொழிலாகக் கொண்டவர்களின் கிராமம்’ என்று தனியாக எதுவும் இல்லை.  காவல்துறை ஆவணத்தில்கூட அப்படி அடையாளப்படுத்தப்பட்ட கிராமங்கள் எதுவுமில்லை. திருட்டைத் தவிர்த்த வேறு பல அரசியல் காரணங்களுக்காகவும்  பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் குற்றப்பரம்பரை என்று நாடு முழுவதும் அறிவிக்கப்பட்டு கைரேகைச் சட்டத்திற்கு கீழ்ப்படுத்தப்பட்ட 160 சமூகப்பிரிவினரில் குறவர் / குறவா என்கிற ஒரே ஒரு பிரிவினர் மட்டுமே ஒன்றுபட்ட தருமபுரி மாவட்டத்தின் சில ஊர்களில் வசிக்கின்றனர் ( இவர்கள் மாநிலம் முழுவதும் 27 பெயர்களிலான பிரிவினராக உள்ளனர்). சுதந்திரம் பெற்ற பிறகும் காலனிய ஆட்சியாளர்களின் மனநிலையிலிருந்து விடுபடாத காவல்துறையின் பயிற்சிப்பள்ளியில் இப்போதும் “குறவா கிரைம்” என்பது தனிப்பாடமாக சொல்லித்தரப்படுவதை மூத்த பத்திரிகையாளர் எஸ்.விஸ்வநாதன் (ஃபிரண்ட்லைன், ஜூன் 8-21, 2002) அம்பலப்படுத்தியுள்ளார். இதனால்தான் எந்தவொரு திருட்டோ வழிப்பறியோ நடந்தாலும் குறவர் குடியிருப்புகளுக்குள் புகுந்து சிலரை தூக்கிப்போவதும் அவர்கள்மீது பழியைப்போட்டு கணக்கை முடிப்பதும் போலிசாரின் வாடிக்கையாக உள்ளதையும் அதற்கெதிராக அம்மக்கள் நடத்திவரும் போராட்டங்களையும் முனைவர் மணி.கோ.பன்னீர்செல்வம் (புதுவிசை-இதழ் 40, டிசம்பர் 2013) ஆதாரங்களுடன் எழுதியுள்ளார்.  

குறவர் மட்டுமல்லாது அந்தந்த வட்டாரங்களில் எண்ணிக்கை பலமற்ற சில சமூகப்பிரிவினரை, குற்றப்பரம்பரையினராக காவல்துறை திட்டமிட்டு பேணிவருகிறது. ராம்ஜி நகர், அஜீஸ் நகர் என்பவையெல்லாம் இவ்வாறு போலிஸ் தேவையிலிருந்து பேணப்படும் குற்றப்பகுதிகள் என்பதை கவனியாமல், அங்குள்ள ஒட்டுமொத்த மக்களையும் திருடர்களாக பார்ப்பது என்ன அறம்? கொடுமை என்னவென்றால் குற்றப்பரம்பரை என்று சட்டப்பூர்வமாக யாருமே இப்போது இல்லை - குற்றப்பரம்பரை என்று நோட்டிஃபை செய்யப்பட்ட சமூகங்கள் வலிமையான போராட்டங்களால் டி-நோட்டிஃபை செய்யப்பட்டுவிட்டன. ஆனால் காவல்துறைக்கும் ஜெயமோகனுக்கும் அவர்கள் இன்னும் குற்றப்பரம்பரையாகவே தெரிகிறார்கள். 

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில், ஒசூர் பகுதியில் எந்த ஒரு கிராமத்தின் ஒட்டுமொத்த மக்களும் திருட்டைத் தொழிலாக கொண்டிருக்கவில்லை. எனவே ‘தருமபுரி, ஓசூர் மாவட்டங்களில் திருட்டை தொழிலாகக் கொண்டவர்களின் கிராமங்களில்’ என்று எழுதுகிற ஜெயமோகன்தான் அந்த கிராமங்கள் எவையெவை என்று இப்போது அறிவிக்கவேண்டும். போதாக்குறைக்கு ‘ஒருமுறை நிர்வாணமாக நின்றபடி போலீஸ் மேல் கல்வீசும் பெண்களை நானே கண்டிருக்கிறேன்’ என்றும் எழுதுகிறார். தான் கண்ணாரக் கண்ட அப்பேர்ப்பட்ட பெண்கள் வாழும் கிராமம் எது என்பதையும் அவர் அறிவிக்கவேண்டும். 

பொத்தாம்பொதுவாக இப்படி சொன்னால் யார் கண்டுகொள்ளப் போகிறார்கள் என்று போகிற போக்கில் பிதுக்கித் தள்ளிய இப்பொய்களின் மூலம் ‘தருமபுரி, ஒசூர்’ பகுதி மக்களை ஜெயமோகன்  இழிவுபடுத்தியிருக்கிறார். ஓர் ஊரின் ஒட்டுமொத்தப் பெண்களும் அம்மணமாக நிற்கிறவர்கள் என்று பொறுப்பற்று எழுதியுள்ளதற்கு  உரிய விளக்கத்தை தரும் அளவுக்கான நாணயத்தை அவரிடம் நாம் எதிர்பார்க்க வேண்டியதில்லை. தான் சொன்ன பொய்யை நிலைநிறுத்த யாரை வேண்டுமானாலும் இழிவுபடுத்தும் ஜெயமோகன் தன் வக்கிரத்தை நியாயப்படுத்த வெண்டைக்காயை தூக்கி விளக்கெண்ணெய்யில் போட்டதுபோல வளவளவென ஏதாச்சும் விளக்கங்கள் கொடுக்கவும்கூடும். அல்லது இதற்கெல்லாம் நான் எப்போதும் பதில் சொல்வதில்லை என்கிற எகத்தாளத்தோடு அடுத்தப்பொய்களை எழுதக்கூடும். 

இவ்வாறெல்லாம் சொல்வதால், ஜெயமோகனுக்கு உண்மையே தெரியாது என்பது பொருளல்ல. ‘கன்னியாகுமரி மாவட்டத்தில் திருட்டை தொழிலாகக் கொண்டவர்களின் கிராமங்களில் இவ்வழக்கம் உண்டு’ என்று எழுதினால் அக்கம்பக்கத்தவர்களால் முதுகு பழுத்துவிடும் என்கிற உண்மை அவருக்கு மிக நன்றாகத் தெரியும். 

கொசுறு- ‘நம் இடதுசாரிகள், முற்போக்கினர் வெளிப்படுத்தும் எந்த உணர்ச்சியையும் நம்பமுடியாமல் அவர்களே நம்மை ஆக்குகிறார்கள்’ என்கிற கட்டுரையின் கடைசிவரி எனக்கு மிகவும் நிம்மதியைத் தந்தது என்பதை சொல்லத்தான் வேண்டும். ஜெயமோகனால் நம்பமுடிகிறபடி இடதுசாரிகளும் முற்போக்கினரும் இயங்கக்கூடாதல்லவா? 

 மலைகள்.காமில் வெளியாகியுள்ள கட்டுரை http://malaigal.com/?p=7409




சனி, அக்டோபர் 10

உ.பி.தன்கர்: பாதிக்கப்பட்டவர்களே குற்றவாளிகளாய்...

தலித்துகளுக்கு எதிரான எந்தவொரு அட்டூழியும் நிகழும்போதும்,  அவர்கள் தமக்குதாமே அந்த குற்றத்தை இழைத்துகொண்டதாக சொல்லி தம்மை விடுவித்துக்கொள்வது சாதியவாதிகளின் தந்திரம். தன்கர் கொடுமையிலும் அப்படி பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளிகளாக்க மட்டுமீறிய உற்சாகத்துடன் சிலர் குதிக்கிறார்கள். இதற்கு ஆதாரமாக பிபிசி ஹிந்திப்பதிப்பு செய்தியையும் காணொளித்துண்டு ஒன்றையும் பகிர்ந்து இதுவரையான தமது தலித் விரோதக் கொடூரங்களையெல்லாம் கழுவப் பார்க்கிறார்கள். ஒரு சம்பவத்தை அதன் முழுமையில் வைத்துப் பார்க்காமல் தமது மனவியல்புகளுக்கேற்ற துணுக்கை பூதாகரப்படுத்திப் பார்ப்பதன் வழியே மீண்டும் இங்கே வெளிப்படுவது சாதியக் கொண்டாட்டம்தான். இந்நிலையில்
என்ற இணைப்பில் வெளியாகியுள்ள உண்மையறியும் குழுவின் அறிக்கை விசயங்களை ஓரளவு தெளிவுபடுத்துகிறது.
காவல் நிலைய அதிகாரி ப்ரவீன் யாதவ், சுனில் மற்றும் ரீடா ஆகியாரை தாக்கி அவர்களது உடைகளை கிழித்தெறிந்த நிலையில், உடன் சென்றிருந்த மற்றொரு ஆண் இதற்கு எதிர்ப்பாகவும் விரக்தியிலும் தனது உடையை கிழித்தெறிந்த வரை சரிதான். ஆனால் அவர் தன்னுடன் வந்திருந்த பெண்ணின் உடையைக் கிழித்தது கண்டனத்திற்குரியது. பெண்ணை தனது உடமையாக பாவித்துக்கொண்டிருக்கிற ஆண்மனம், அவரது ஒப்புதலின்றியே அவரை என்னமும் செய்யும் தன்னியல்பில் இயங்கியிருக்கிறது.  இதை நியாயப்படுத்துவதோ சப்பைக்கட்டு கட்டுவதோ தேவையற்றது. ஆனால் இதை வைத்து முழுவிசயத்தையும் ஜோடனை என்பது போல சித்தரிக்கும் முயற்சிகள் காவல் துறையின் அட்டூழியத்தை நியாயப்படுத்தவே வழிவகுக்கும். 

 FACT FINDING REPORT OF CPI ML & RYA TEAM TO DANKAUR
Stripping of Dalit Family in Dankaur: A Clear Case of Police Atrocity on Dalits
----------------------------------------
In the wake of photos and videos of a Dalit family being stripped in Dankaur doing rounds in social media and news reports of the same a fact finding team of CPI-ML and RYA activists today (9th October) visited Dankaur and the village of Atta Gujraan around 5 Kms from Dankaur, which is home to the Dalit family. During the course of the visit we met some family members of Sunil Gautam (the man in the photos and videos), his neighbors as well as eye witness to the actual incident in Dankaur town. We also tried to locate the person who had taken the photos and the video and subsequently circulated them over social media
Background and Sequence of Events
------------------------------------------------
On the evening of 6th October (Tuesday) Sunil Gautam a Dalit belonging to the Jatav community and resident of Atta Gujran village and his elder brother Sonpal were watering the small plot of land which they owned near Dankaur town. It was late in the evening and was getting dark, at this time three men stopped on the road and threatened both Sunil and Sonpal with knives and katta (country made revolver) and looted their bike (which belonged to Sunil), money, keys of Sonpal’s autorickshaw and ran away with it. After this both Sunil and Sonpal went to Dankaur Police Station and asked for a FIR to be filed. At this point the police refused to file an FIR.
The next day (7th October) Sunil and Sonpal along with their wives Harwati and Reeta, the wife of Sunil’s youngest brother Sudesh, Babita along with the Sunil and Sudesh’s children (all of them within the age group of 6months – 3 years), in total eight of them sat on a dharna in Dankaur demanding immediate filing of FIR with specific charges of looting and physical assault. The site of the dharna was opposite the shop owned by Sunil’s family. Then SHO Pravin Yadav, in civilian dress, came to the dharna site and started beating Sunil and tearing his clothes at this point his wife tried to intervene and the SHO started to beat Reeta and tearing her clothes. Having lost all hope and frustrated with the inaction and atrocity of the police they tore their own clothes as an act of protest.
Stripping oneself as an act of protest against the powers that be is not something new for fellow travelers of movements. We have seen that in the wake of the rape and murder of Manorama Devi, women in Manipur stripped themselves and openly challenged the Indian Army to Rape them.
Aftermath and Present Situation
------------------------------------------
The aftermath of the incident is extremely shocking. After Sunil and his wife stripped themselves the SHO arrested all eight of his family members and took to the Gautam Budh Nagar District Jail at Luksar. It is even more alarming that two separate FIR’s have been filed against the family, which includes three infants, one by apparently the ‘public’ which contains sections IPC 341, 504 and 294 (Indulging in obscene acts). The FIR filed by the police on the Dalit family is shocking and ridiculous, it contains sections IPC 147 (Rioting), 324, 294, 307 (Attempt to Murder), 394 (Causing Hurt in Committing Robbery), 7 CL Act. From the charges that have been foisted on the family along with the photos and videos it becomes clear that it is a case of police atrocity and targeting Dalits.
As of now all eight of them including three infants are in Luskar Jail. In their village there is only Sonpal’s daughter Bharti, Sunil’s younger brother Sudesh and Sunil’s mother. We met Bharti in the village who being present at the site of the Dharna gave us an eye witness account. We couldn’t meet Sudesh who had gone to meet the Sunil and the rest of the family is in jail.
It is the police which is squarely at fault for beating up Sunil and tearing his clothes who was only exercising his democratic right to protest as the police was not filling his FIR. Instead of heeding to his demand and filing the FIR the police has falsely charged with attempt to murder, when none of his family members had any weapon with them, they were only peacefully sitting on a dharna. This is also related to the larger collapse of any semblance of law and order in UP. This is not the first time that Dalits are being attacked with impunity during the rule of Akhilesh Yadav.
Also since most of the family is in jail the family is in need of able and skilled and all help in this regard will be welcomed.
We Demand:
--------------------
1. All the charges against Sunil and his family are withdrawn and they are immediately released from jail
2. The SHO of Dankaur, Pravin Yadav should be immediately suspended and a case of atrocity on SC/ST should be filed against him.
3. The Looters of Sunil’s bike must be immediately arrested and brought to the book
4. The Family should be adequately compensated.
The Fact Finding Team Consisted of Com. Aslam, Com. Brahm, Com. Veerpal (CPI ML Activists in the Noida, Dadri and Greater Noida Area) and Com. Om (National Secretary, RYA)
9990748079, 9013596196


வெள்ளி, அக்டோபர் 9

உ.பி. தன்கர் தலித்துகள் மீதான அட்டுழியங்கள் - முறையீடுகள்

தலித் ஊடக கண்காணிப்புக் குழுவினர் ( Dalits Media Watch Team) அனுப்பியிருந்த மின்னஞ்சல் இங்கு பகிரப்படுகிறது.

1
Dear Friends
Greetings !

Today in the morning I had a discussion with Mr. Anil Parashar, Registar- National Human Rights Commission-NHRC. After my discussion with him I sent a brief complaint to NHRC for instant action . The matter of complaint is below:

To 
The Chairman
National Human Rights Commission
New Delhi

Sub: Brutal atrocity on Dalit women and her family by caste HIndus and Police personals on 7th Oct in PS Dankakur, Gautam Budh Nagar, UP

Respected Sir

The atrocities against people belongs scheduled caste in UP are on rampant from last two years. The nature of atrocities are becoming brutal day by day.

Since yesterday morning videos and clipping  of brutal atrocity against a peacefully protesting scheduled caste family in PS Dankaur  become viral. 

It have clear evidence in the footage and clippings that police personal had naked Dalit women and brutally beating them.

Since last one year UP has witnessing huge level of human rights violation by the fundamentalist forces and police. It is very panic situation.

Therefore we appeal and demand to the commission :

To constitute a fact finding team compering minimum three members of the commission.

1.    To order immediate termination of whole police staff of the local police station.
2.    Immediate FIR and arrest of SO, dankaur, & other police personals and other accused.
3.    Suspension of SSP and District collector.
4.    Compensation of rupees one crore (10 Million) to the family.
5.    Provide protection & security to the family.

.Arun Khote
On behalf of Dalits Media Watch Team
(An initiative of “Peoples Media Advocacy & Resource Centre-PMARC”)

2

Petitioner:                                                                       Date: 09 Oct 2015

          Adv. Hubertson,
          ADVOCATE,
          No.155/319, Linghi Chetty Street, Chennai – 600001,
          Tamil Nadu, India.
          Email: <hubertson@gmail.com>

Victims:

1.      Mr. Sunil Gautam,
Dankaur - 203201, Greater Noida,
Gautam Buddha Nagar District, Uttar Pradesh.

2.      Name Unknown, female, identified in the video and photo
W/o Mr. Sunil Gautam,
Dankaur - 203201, Greater Noida,
Gautam Buddha Nagar District, Uttar Pradesh.

3.      Name Unknown, male, identified in the video and photo
Dankaur - 203201, Greater Noida,
Gautam Buddha Nagar District, Uttar Pradesh.

4.      Name Unknown, female, identified in the video and photo
Dankaur - 203201, Greater Noida,
          Gautam Buddha Nagar District, Uttar Pradesh.

Respondents:

1.      Mr. Praveen Yadav,
The Station House Officer,
Dankaur police station, Dankaur - 203201, Greater Noida,
Gautam Buddha Nagar District, Uttar Pradesh.
Mobile No: 9454403383, 9411487144, 8130483221.

2.      The Driver, can be identified in video,
The Mahindra Jeep with Regn No. UP 16 G 0644 of Police Dept,
Dankaur police station, Dankaur - 203201, Greater Noida,
Gautam Buddha Nagar District, Uttar Pradesh.

3.      Another Five Policemen, can be identified in video,
Dankaur police station, Dankaur - 203201, Greater Noida,
Gautam Buddha Nagar District, Uttar Pradesh.

To

1.      The District Magistrate,
Gautam Buddha Nagar District, Uttar Pradesh State.
Phone No: 0120-2552552/2544700
Email: <dmgbn@nic.in>

2.      The Senior Superintendent of Police,
Gautam Buddha Nagar District, Uttar Pradesh State.
Phone: 0120-2514750
Mobile No: 8800226226, 9454400271

3.      The Superintendent of Police, (City)
Gautam Buddha Nagar District, Uttar Pradesh State.
Phone: 0120-2422271
Mobile No: 8800199921

4.      The Deputy Inspector General of Police,
Meerut Range, Meerut Zone,
Uttar Pradhesh State.

5.      The Inspector General of Police,
Meerut Zone,
Uttar Pradhesh State.
Mobile No: 9454400144
Phone No: 0121-2763664        

6.      The Director Generl of Police,
Police Headquartesr,1,Tilak Marg, City-Lucknow, Pincode-226001
Mobile No: 9454400101,
Phone No: 0522-2206104 (R), 0522 2206120 (F)
Email: <dgp@up.nic.in>
         
7.      The Principal secretary to Government,
Home Dept, Uttar Pradhesh.

8.      The Chief Minister of Uttar Pradhesh

9.      The Governor of Uttar Pradhesh


Sub: “Mr. Praveen Yadav, The Station House Officer, Dankaur police station and six other Policemen stripping the clothes of two Dalit women and two men on the road at Greater Noida – Action requested – reg”

Sir/Madam,

1)     Yesterday, (08/Oct/2015), the above said respondents has stripped the dresses of two Dalit Women and two men on the public road at Greater Noida, beaten up them with lathi sticks, assaulted them and paraded them nakedly which can be displayed and viewed in the attached videos.
2)     The inhumane, illegal and wilful Human Rights violations committed by the respondents is evidenced by videos, photos, Newspapers, News published in websites and so on as below:
a.      News published in Punjab Spectrum Website over the url http://www.punjabspectrum.news/2015/10/08/707 and their contact details are Email: PunjabSpectrum@gmail.com, Whatsapp: 001 323 325 1544, Viber : 001 323 325 1544, Ph: 001 323 325 1544, Website: http://www.punjabspectrum.com/contact-us, Facebook: Facebook.com/PunjabSpectrumCom, Twitter: Twitter.com/PunjabSpectrum, Youtube: YouTube.com/PunjabSpectrumDotCom
b.     Video News published in Daily Motion website vide url http://www.dailymotion.com/video/x38yzy5_dalit-family-nu-nanga-karke-ghumaya_news#tab_embed and their contact details are 140 boulevard Malesherbes, 75017 Paris, Phone No: +33 1 77 35 11 00.
c.      News published in the Website vide url http://www.eenaduindia.com/State/UttarPradesh/2015/10/08191417/Video-SHO-accused-of-assaulting-and-stripping-family.vpf and their contact details are Ushodaya Enterprises Pvt. Ltd., Eenadu Complex,Internet Dept, Somajiguda,Hyderabad -500082, Contact Person:Mr.Mallanna, Cell No: 9000180611 , 9848880611, Email: mallanna.thota@eenadu.net, GSM: 9848880611 / 9000180611, Tel: 040 23318181 ext:6624.
d.     News published in Punjab Herald website vide http://www.punjabherald.com/2015/10/3326 and their contact details are punjabherald@gmail.com.
3)     It seems that the Dalit victim Mr. Sunil Gautam has lost something due to robbery by some criminals.  Hence he has approached the 1st respondent’s Dankaur police station.
4)     But the Policemen mentioned as respondents who arrived in the Mahindra Jeep vide Regn No: UP 16 G 0644, which can be identified in the video has stripped the dresses of Dalit women and Men publicly on road.
5)     These Policemen were no way fit to continue as Government Servants and the intention of the Policemen has to be suspected, whether they have done this to favour the Robbers or to humiliate the Dalit Women?

Hence, I request the competent authorities of Home Dept and Immediate Official to act upon this issue without further delay, as below:
1)     To register First Information Report against the above said respondents and imitate investigation and further legal proceedings accordingly.
2)     To instruct the respondents as Policemen of Dankaur police station to provide new dresses to the Dalit Women and men for tearing their dresses.
3)     To dismiss the respondents as Policemen of Dankaur police station whoever involved in stripping the dresses of Dalit Women and men on the road.
4)     To suspend the respondents as Policemen of Dankaur police station whoever involved in stripping the dresses of Dalit Women and men on the road, until the investigation and trial is carried out.
5)     To suspend the immediate Police Officials, who has failed to take appropriate action, to favour the Policemen of Dankaur police station whoever involved in stripping the dresses of Dalit Women and men on the road, until the investigation and trial is carried out.
6)     To provide protection to the family of the victims as Dalit Women and men who has been brutally attacked by the respondents.
7)     To instruct the State Government to pay a compensation of Rupees ten lakhs per victim and the same may be compensated by recovering the monthly salaries of the respondents and by seizing the vehicles of the Dankaur police station, Gautam Buddha Nagar District Police and Home Dept for sale through auction.

By-
(HUBERTSON)
  ADVOCATE

உ.பி. தன்கர் கொடூரம்: ஆடை கிழிக்கப்பட்ட தலித் உடல்களில் தெரிவது எவரின் அம்மணம்?


https://youtu.be/O8o9lJfxYzk

உத்திர பிரதேச மாநிலம் தன்கர் கிராமத்தில் ஒரு கும்பல் தலித் குடும்பம் ஒன்றின் பெண்களையும் ஆண்களையும் கடுமையாக தாக்கி அவர்களை ஆடைகளைக் கிழித்தும் உருவியும் அம்மணமாக்கியிருக்கிறார்கள்.  இதுகுறித்த இந்த வீடியோ காட்சியை நேற்று மாலையிலிருந்து பலரும் முகநூலில் பகிர்ந்திருந்தார்கள். ஆனால் இன்று காலையில் என்னுடையது உட்பட பலரது பகிர்வும் நீக்கப்பட்டிருக்கிறது. 

பெண்களையும் அவர்தம் குடும்பத்து ஆண்களையும் கொடுமைப்படுத்தி ஆடைகளை கிழித்தெறிந்தது பற்றி எவ்வித அவமானமும் கொள்ள துப்பில்லாதவர்கள், அந்தக் கொடுமை பொதுவெளியின் கவனத்திற்குள்ளாகி இந்துமதமும் சாதியாதிக்க மனப்பாங்கும் அதிகாரவர்க்கத்தின் அட்டூழியங்களும் அம்பலமாகிவிடக்கூடாது என்பதில் குறியாக இருக்கிறார்கள். வீடியோவை நீக்குவதன் மூலமாக இப்படியான கொடுமையே நடக்கவில்லை என்று நிறுவுவதும்கூட "டிஜிடல் இந்தியர்களின்" நோக்கமாக இருக்கலாம். டிஜிடல் இந்தியாவின் பங்குதாரியாக சேர்ந்துள்ள முகநூல் நிர்வாகமே நீக்குவதாக இருந்தாலும் முன்னறிவிப்பு செய்திருக்க வேண்டும். 

எங்கோ நடந்ததை இப்படி வெளிச்சம் போடுவது அறக்குறைவான செயலாகாதா என்கிறார்கள். வெட்டவெளியில் இப்படியொரு அட்டூழியம் நிகழும்போது நெட்டைமரங்களென பார்த்திருப்பவர்களுக்கு இல்லாத அவமானம் நமக்கெதற்கு என்பதால்தான் யுடியூப்.காமில் இருந்து இந்த வீடியோவை இணைத்துள்ளேன். படிப்பு, வேலை, சம்பளம், பொருளாதார ஏற்றம், அதிகார அமைப்புகளில் பங்கு உள்ளிட்ட எதுவும் தலித்துகளைப் பற்றிய சாதியவாதிகளின் அணுகுமுறையை  மாற்றிவிடவில்லை என்பதற்கான இந்த சாட்சியம் அழிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவும்கூட இங்கு வெளியிட்டுள்ளேன். 

இந்த வீடியோ ஆதாரத்தைக் கொண்டு தேசிய மனித உரிமை ஆணையம், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம், தேசிய மகளிர் ஆணையம் ஆகியவற்றில் புகார் செய்ய முடியுமா என்பதை யாரேனும் தெளிவுபடுத்துங்கள்.


செவ்வாய், அக்டோபர் 6

ஐம்பூதத்தான் அருள் - ஆதவன் தீட்சண்யா



1.
இரவின் சடவுகளால் சோம்பிப் புலர்ந்து
அந்தரத்தில் வீணே சுழன்றலைந்த 
அந்தச் சூரியனை
ராந்தல் கண்ணாடிபோல் சாம்பலால் துலக்கி
கதிர்களை நீவி பிரயோசனமாய் ஒளிரப் பணித்தேன்

பின்
அதன் வெம்மை நன்கு பூமியில் படும்படியாக
வாசலை துப்புரவாக கூட்டிவைத்தேன்

ஏலவே நான் சொல்லிவைத்திருந்ததன் பேரில்
கோழிகள் கூவி
எழுப்பின எல்லோரையும்

ஆனால் சற்றைக்கெல்லாம்
அறுத்தெறிந்த அன்னாசிப்பழத்துண்டைப்போல
மேலேறிச் சுழன்று போய்க்கொண்டிருந்தது சூரியன்

நட்டாற்றில் முங்கியிருந்து திடுமென வெளிப்பட்ட ஒருவன்
மந்திரங்களை முணுமுணுத்தபடி
வானோக்கி விரித்தான் கைகளை
கொஞ்சம் தாமதித்திருந்தாலும்
அவன் கைகளுக்கு சிக்கியிருப்பேனே என்று
பதறும் நெஞ்சைப் பிடித்துக்கொண்டு
மூச்சிரைக்க சடுதியாய் மேலேறிய சூரியன்
நட்சத்திரங்களையும் கோள்களையும் கிரகங்களையும்
ஒளிறெக்கைக்குள் மறைத்து பத்திரப்படுத்தியது

இப்போதுமென்ன
வசைகளை மந்திரமென முணங்கும் அவன்
சூரியனைத் தன் அக்குளிலிருந்து பிறப்பித்ததாகத்தான்
ஊரெங்கும் சொல்லித் திரிகிறான்
அறிவியலும் வரலாறும் அறியாத நீங்களோ
சூரியனை விடுத்து
அவனைத் தொழுகிறீர்.

2.
பூமியின்
ஒவ்வொரு அங்குலத்திலும்
அதனதன் உரிமைக்காரர் பெயர் பதியப்பட்டாயிற்று

மஞ்சள் நீலம் அதிபச்சையென
வண்ணம் பூசிய முட்டுக்கற்கள்
ஆக்கிரமித்தவர் பெயரை அறிவிக்கின்றன

இவ்வாறே
கடற்பரப்பும் வான்வெளியும்
அளந்து பிரிக்கப்பட்ட பிறகு
வேறு கிரகங்களுக்கு விரைகிறீர்கள்

எங்காவது இருக்கிறதா எங்கள் பெயருமென
தேடியலையும் நாங்கள்
யார் தலையில்
கால் வைக்க?

 
3.
காற்று எல்லாவிடத்திலும் நிறைந்திருக்கிறது
சாதியைப்போல
பொத்தானுக்கு அடங்கி வீசவும் உறையவும் கற்றுக்கொண்ட அது
கடவுளைப்போல வீசுகிறது பாரபட்சமாக 
நாசியைக் கருக்கும் நாற்றங்களை எம்மீது வீசிச்செல்லும் அது
எம்வாழ்வின் நறுமணங்களை வேறெங்கோ வழித்துச்செல்கிறது
மூளும் ஆத்திரத்தில்
கழுத்தைப் பிடித்து இறுக்கிவிடலாமாவெனத் தோன்றுகிறது
எல்லோரும் செத்தொழிவீர்களேயென விட்டுவைக்கிறேன்.

4.
அமீபாவை ஈன்றெடுக்கும் வலுவை
தண்ணீருக்கு ஈந்ததிலிருந்து தொடங்குகிறது
உயிர்களுக்கான எமது கொடை
ஆதியமீபாவின் ஒற்றைச்செல் பல்கிப் பெருகியபோது
அதன் ஒவ்வொன்றிலும் எங்கள் பெயரிருந்தது
ஆய்வகங்களின் மேசைகளில் நீங்கள் செய்ததெல்லாம்
உங்களது பெயர்களை ஸ்டிக்கர்களாக ஒட்டியதுதான்.
நெற்றிவேர்வை நிலத்தில் சொட்டி
நீரை பூமியில் உண்டுபண்ணிய எங்கள் வாயில்
சிறுநீரைப் பெய்யும் நுட்பம்
நீங்கள் கண்டுபிடித்த மற்றொன்று.

5.
அண்மையில் தெரிகிற ஆகாயம்
உண்மையில் தொலைவில் இருக்கிறது
மேகங்கள் சுதந்திரமாய் நகர்ந்து திரிவதைப் பார்த்தாலே
அது இன்னமும் ஊர் சேரியென
பிரிக்கப்படாததாய் இருப்பது புரிகிறதல்லவா
பூமியை முழுதாய் உங்களுக்கு தானபத்திரம் செய்தபின்
இரவோடிரவாகப் பறந்த நாங்கள்
ஆகாயத்தில் குடியேறியதற்கு அதுவும் ஒரு காரணம்
மற்றொன்று
உங்களால் கொளுத்தப்பட முடியாத கூரை அது
ஆயினும்
நீங்கள் ராக்கெட்டுகளை அனுப்புவதன் பின்னேயுள்ள
சூழ்ச்சிகள் நாங்கள் அறியாததல்ல
நாங்கள் வசிக்கும் ஆகாயம்
ஒருபோதும் உங்களுக்கு தரைவிரிப்பாக மாறாது.
 
 நன்றி: செம்மலர், அக்டோபர் 2015
















துரோகிகள், பாவிகள், பைத்தியங்கள் மற்றும் கரப்பான்கள் - ஆதவன் தீட்சண்யா

  கரப்பான் - நாவல் / அரிசங்கர் / எதிர் வெளியீடு, விலை: ரூ.160 இன்று அதிகாலை 4 மணிக்கும் முன்பாகவே முழிப்புத் தட்டிவிட்டது. சும்மா புரண்டு...