பேறுகால குறிப்புகள் - ஆதவன் தீட்சண்யா

பொண்ணப் பெத்து
வளத்து வாருவம் பண்ணி...
யம்மாடி... கஷ்டப்பட யாரால ஆவும்...

ஆமாமா... ஆமாமா...
எல்லாரும் ஆம்பளப்பிள்ளையாவே பெத்துக்குவம்

பொம்பளைங்களே இல்லாம ஆயிட்டா என்னாகும்

அட நீ வேற
பண்ணைக்கோழி ஸீட்லெஸ் திராட்சையாட்டம்
கண்டுபிடிச்சுக்கலாம் எதையாச்சும்
தேவைன்னா குளோனிங் பண்ணிக்கலாம்

ஆனா பையன் வளந்து பொம்பளத்துணை கேட்டா...

ஆங்... அப்பனும் ஆத்தாளும் ஆளுக்கொரு பக்கமா
அவங்கிட்டப் படுத்து...

ச்சே... என்ன இப்படி அசிங்கமா பேசறீங்க

அப்ப உம்பையனை எம்பையனுக்கு கட்டிவைப்போம்.

1 கருத்து:

  1. ஆதவன்...இப்படி பையன்களே பிறந்தால், ரோட்டில் வயதான அம்மத்தா, பாட்டிமார்கள் பாடு திண்டாட்டம்தான்..

    ஆ.ஈசுவரன்/திருப்பூர்.

    பதிலளிநீக்கு