தரிசனம் - ஆதவன் தீட்சண்யா

பிரபஞ்சத்திலிருந்து
பிய்ந்து தொங்குகிற உலகம்
மாயக்கோடுகளின் இறுக்கத்தில்
தெறித்து சிதறியது தேசங்களாய்

சாலைகளின் முனைகளில்
ஒடிந்து ஒட்டிக்கொண்டிருந்த ஊர்கள்
தெருக்களின் நெருக்கத்தில்
பிதுங்கிக் கிழிந்திருந்தன

வீடுகளை விடவும்
இங்கே
வலுவாகக் கட்டப்படுவதும்
பாதுகாக்கப்படுவதும்
மதில்களே

கதவைப் பிளந்து
மறித்த சுவர்களின் பின்னே
குறுகிக்கிடக்கும் அறைக்குள் நுழைந்து
விரியத் திறந்துவைத்தேன்
சாளரத்தை

வயல்களைப் பிரித்த வரப்புகள்
மறைந்திருந்தன
நல்ல ஊட்டத்தில் சமமாய் வளரும்
பயிர்களின் பெருக்கத்தில்.

1 கருத்து:

 1. //வீடுகளை விடவும்
  இங்கே
  வலுவாகக் கட்டப்படுவதும்
  பாதுகாக்கப்படுவதும்
  மதில்களே//

  அருமை!

  பதிலளிநீக்கு