காலையில் எழுந்ததும் நான் இன்னாரின் பிள்ளை என்றோ இதுதான் என்வீடு என்றோ யாரும் யாரிடமும் கூறிக்கொண்டிருப்பதில்லை. அப்படி யாராவது கூறிக்கொண்டிருந்தால் அது அவரது பிறப்பு பூர்வீகம் பற்றி அவருக்கே இருக்கிற சந்தேகத்திற்கு அவரே சொல்லிக்கொள்கிற சமாதானமாக இருக்கலாம். அல்லது, வேறுவகையான தேவைக்கு ஒரு ஆதாரத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார் என்று அர்த்தம். ஆரியக்குஞ்சுகள்/ கொழுந்துகளின் நிலையும் அதுதான். அவர்கள் சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாமும் அல்லது சந்தர்ப்பங்களை உருவாக்கிக் கொண்டும்கூட ‘இந்தியா ஆரியர்களின் நாடு. ஆரியர்களே இந்தியாவின் பூர்வகுடிகள், ஆரியர்களின் தாயகம்/ தந்தையர்நாடு இந்தியா’ என்கிற பொய்களை திரும்பத்திரும்பக்கூறி உரிமை கோருகிறார்கள். அதற்காக அவர்கள் கம்யூட்டர் கிராபிக்ஸில் காளையை குதிரையாக்குவது, செத்தவர்களை சாட்சியாக்குவது என்று வரலாற்றைத் திரிக்கும் விதவிதமான மோசடியில் ஓயாதுழைத்துக் கொண்டிருக்கிறார்கள். வாய்க்கால் வரப்பு தகராறில் கவனம் திரும்பி வெட்டுக்குத்து நடத்திக் கொண்டிருக்கிற தொல்குடிகள், இப்படியொரு கும்பல் இந்தியாவையே அபேஸ் பண்ணும் மோசடியை காண மறுக்கிறார்கள்.
2013 ஜனவரி மாத ஆழம் இதழின் கடைசிப்பக்கத்தில் நூல் அறிமுகம் இடம் பெற்றுள்ளது. அசோகன் நாகமுத்து எழுதி அந்திமழை வெளியிட்டுள்ள ‘போதியின் நிழல்’ என்ற புத்தகத்தை அறிமுகப்படுத்தி தனுஜா என்பவர் எழுதியிருக்கிறார். யுவான் சுவாங்கின் இந்தியப் பயணம் பற்றிய இந்நூலுக்கு ஒரு அறிமுகம் வருவது நல்லதுதானே என்கிறீர்களா... பொறுங்கள்.
‘‘ பட்டுப்பாதை என்று இன்று அழைக்கப்படும் வழித்தடத்தில் கன்ஃபூஷியஸின் நிலத்தில் இருந்து புறப்பட்டு ஆரியர்களின் நிலத்தை வந்தடைந்த யுவான் சுவாங் போதிமரத்தின் ஞானநிழலைத் தரிசித்தார். இந்தத் தரிசனத்தின் கதை அல்லது தரிசனம்தான் போதியின் நிழல்...’’ இந்தியாவை ‘ஆரியர் நிலமாக’ அசோகன் நாகமுத்து சித்தரித்திருந்தாலும் தனுஜா சித்தரித்திருந்தாலும் அது போதிமரத்தின் வேரில் பூணூல் மாட்டும் மோசடியே.
இரண்டாம்தாரத்துக்குப் பிறந்த பிள்ளை தகப்பன் பெயரை அடிக்கடி பயன்படுத்துவதில் உள்ள உளவியல் பற்றி யாரோ (விமலாதித்து மாமல்லன்?) எழுதியது இவ்விடத்தில் ஏனோ நினைவுக்கு வருகிறது. கூடவே, தலித்துகளுக்கு எதிரான பூர்வகுடி- தமிழ்ச்சாதிகளின் பட்டியலில் பார்ப்பனர்களையும் சேர்த்துக் கொண்டிருக்கும் பொங்கலூர் மணிகண்டன்- ராமதாஸ் வகையறாவும் ஞாபகத்தில் வந்து தொலைக்கிறார்கள்.
- ஆதவன் தீட்சண்யா

//வாய்க்கால் வரப்பு தகராறில் கவனம் திரும்பி வெட்டுக்குத்து நடத்திக் கொண்டிருக்கிற தொல்குடிகள், இப்படியொரு கும்பல் இந்தியாவையே அபேஸ் பண்ணும் மோசடியை காண மறுக்கிறார்கள்//
பதிலளிநீக்குமோசடி செய்பவர்கள் மட்டும் ஆயிரம் வயது வரை உயிர் வாழ்ந்து விடவா போகிறார்கள் என்பதால் இருக்குமோ