முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

March, 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

படிப்பும் பகிர்வும் - ஆதவன் தீட்சண்யா

படிப்புஎன்பதைகல்விநிலையத்துடன்மட்டுமேதொடர்புடையதாககருதிக்கொள்ளும்ஒருபோக்குசமூகத்தில்செல்வாக்குபெற்றுள்ளது. எனவேகுறிப்பிட்டவகுப்பைமுடித்ததுமேபடித்துமுடித்துவிட்டதாகநம்மில்பலரும்நினைத்துக்கொள்கிறோம். அதாவதுநாம்படிக்கவேண்டியதேஅவ்வளவுதான்என்றும்இனிஇவ்வுலகத்தில்படிப்பதற்கெனஎதுவுமேஇல்லையென்றும்இறுமாப்படைகிறோம்.
குறிப்பிட்டவயதில்குறிப்பிட்டவகுப்பில்அதற்கெனதீர்மானிக்கப்பட்டபாடங்களைமட்டுமேபடித்துமுடிப்பதோடுபலரதுபடிப்பின்எல்லைமுடிந்துவிடுகிறது. அதிலும், அந்தபடிப்பைமுடித்ததற்காகவேலையொன்றும்கிடைத்துவிடுமானால்ஒருவர்படித்ததன்பயன்அதுவேயென்றாகிவிடுகிறது. அதற்கப்புறம்அவர்படிப்பதெல்லாம்அவரதுஅலுவல்சார்ந்ததாள்களையும்கோப்புகளையும்மட்டும்தான். இப்படியானவர்களில்ஒருசாரார் ‘நாட்டுநடப்பைஅறிந்துகொள்ளவும்பொதுஅறிவைவளர்த்துக்கொள்ளவும்’ நாளிதழ்களையும்வாரஇதழ்களையும்படிப்பதைஒருவழக்கமாககொண்டுள்ளனர். இவற்றின்வழியாகஅறிந்துகொண்டசெய்திகளைக்கொண்டேஉலகின்சகலத்தையும்அறிந்துகொண்டதானபாவனையைஇவர்களிடம்காணமுடியும். இவர்களைப்

எழுத வேண்டிய நாட்குறிப்பின் கடைசிப் பக்கங்கள் - ஆதவன் தீட்சண்யா

எவர் கண்ணுமறியா நுண்ணிழையில் பூக்கும் அரூபச் சுரங்கம் மனசு. அரணும் மதிலுமென வாய் பிளந்து மேயும் முதலைகளின் அகழியுமாகிய தடை சூழ் காவற்கோட்டைகள் எப்புறமும் மாயத்தில். அண்டவொணாத கால வெளியற்று ஓயாப்பறவையின் சிறகுகளாகி சதாவும் இயக்கம். அணுவணுவாய் உள்பொதியும் அனந்தகோடி ரகசியம் படிக்க யாரால் கூடும்… முடிவற்ற ஆயுளே சித்தித்தாலும் முடியா இலக்கு. வாழ்நாளெல்லாம் முயன்று நனைந்தத் துணியாய் துவளும் இக்கணத்தில் ஏதுமற்ற வெறுங்கூடாய் என்னையே வீசிக்கொள்கிறேன் படுக்கையில். சதையிணுக்குகளில் சல்லடையிட்டு, சாரம் குடிக்க நாச்சுழற்றும் குரூரத்தின் ரூபமானது இப்படுக்கை. காலத்தின் குழந்தைகள் கடைசி சயனம் கொள்ள கதியிதுவேயென விரிந்த கபடம்- ஆஸ்பத்ரி வார்டின் அழுக்கு படுக்கைகள் போல.
பாயின் ஒரு கோரைபோல ஊடுபாவி மௌனத்தின் உரு பூண்டு படுத்திருந்தேன். பசிப்பும் புசிப்புமற்ற ஏகாந்தமேக, பறக்கும் கம்பளத்தில் படுத்திருப்பதான சிலிர்ப்பு. பாயும் தலையணையும் கெக்கலிக்கின்றன தாமும் படுத்திருப்பதாய். ஓய்விற்கோ உறக்கத்திற்கோ அல்லாது விழிப்பை முன்னிறுத்தியே நான் படுத்திருப்பதை அவற்றுக்கும் யாவற்றுக்கும் பதிலாய் சொன்னேன்…