முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

June, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஆதிமருத்துவர்களும் மீதி மருத்துவர்களும் - ஆதவன் தீட்சண்யா

கோ.ரகுபதி எழுதிய ‘ஆதி மருத்துவர் சவரத்தொழிலாளராக்கப்பட்ட வரலாறு’ என்கிற நூல் குறித்த இக்கட்டுரை 2007ல் புத்தகம் பேசுது இதழொன்றில் வெளியானதாக நினைவு. வரலாற்றை மீட்டெடுப்பதாய் ஆரவாரமிடும் ஆய்வுகள் ‘முன்னொரு காலத்தில் ஆண்ட பரம்பரையாக்கும்...’ என்று பெருமிதத்தில் முடிவது இப்போதைய மோஸ்தர். எல்லோருமே ஆண்ட சாதியினர் என்றால் யார்தான் குடிமக்களாய் இருந்தார்கள்? ஆண்ட சாதியாய் இருந்திருந்தாலும், அந்த சாதியினர் எல்லோருமே ஆண்டார்களா, ஆண்ட காலத்தில் கண்ட மேன்மை என்னென்ன, தங்கள் சாதிப் பெண்களோடு அதிகாரத்தைப் பகிர்ந்து கொண்டார்களா, பிற சாதியாரோடு இணக்கமாக வாழ்ந்தார்களா அல்லது கையிலிருந்த அதிகாரத்தைக் கொண்டு ஒடுக்கினார்களா என்ற கேள்விகளில்லாமல் வெறுமனே ஆண்ட சாதி என்னும் பீற்றல் எதையும் மீட்டுத் தரப்போவதில்லை. ஒருவேளைக் கஞ்சிக்கும் ஒருமுழ கந்தைக்கும் நாதியற்றுக் கிடக்கிற நிகழ்கால வாழ்க்கையை எதிர்கொள்ள முடியாமல் திணறுகிறவன், எங்கள் முப்பாட்டனிடம் தான் நாட்டின் கஜானா சாவி இருந்தது என்று சொல்வதற்கு இணையானதே இந்த மீட்டெடுக்கும் ஆய்வுகளின் சாரமும்.
ஆண்ட சாதியினர் என்று இப்போது நிறுவும் முயற்சிகளின் பின்னே …

நீங்கள் சுங்கச்சாவடியில் நின்றுகொண்டிருக்கிறீர்கள் - ஆதவன் தீட்சண்யா

சுதந்திரப் போராட்டத்தின் முதலாமாண்டு நிறைவுமலரில் வெளியாகியிருந்த இக்கட்டுரை காலத்தின் தேவை கருதி தேடிப்பிடித்து இங்கு மறுபிரசுரம் செய்யப்படுகிறது. மேற்சொன்ன மலரின் பிரதியை நுண்ணொளி மின்னகச் சுருளாக இவ்வளவுகாலமும் பாதுகாத்து வருகின்றமைக்காகவும் அதிலிருந்து இக்கட்டுரையை நகலெடுத்துக்கொள்ள அனுமதித்தமைக்காகவும் ‘மூச்சு’- தனிநபர் நூலகப் பொறுப்பாளர்களுக்கு எமது நன்றியை இவ்விடத்தில் உரித்தாக்குகிறோம்.


நாசூக்கு, இங்கிதம், மென்மொழி போன்ற கற்பிதங்களுக்கு அடிமையாகிப்போன நமது இளையதலைமுறையினருக்கு இக்கட்டுரையின் தலைப்பேகூட அருவருப்பையும் முகச்சுளிப்பையும் ஏற்படுத்தக்கூடும். அவர்கள் அன்றாட வாழ்வினை நடத்திப்போவதில் யாதொரு இடர்ப்பாட்டையும் தங்குதடையையும் எதிர்கொள்வதில்லை. அவர்களுக்கு எல்லாமே இயல்பாக கிடைத்துக் கொண்டிருக்கின்றன. எனவே இப்போதிருக்கும் நிலையே என்றென்றும் இருந்து வருவதாக நினைத்துக்கொள்வதோடு இந்த நிலையே இனி எந்நாளும் நீடிக்குமென்பதும் அவர்களது நம்பிக்கையாக இருக்கிறது. இதில் அவர்களது பிழையென்று ஏதுமில்லை. தாங்கள் கடந்துவந்தப் பாதையையும் அதன் பாடுகளையும் அடுத்தடுத்த தலைமுறையினருக்கு சரியாக ப…