முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

August, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Viyugam - எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யாவுடன் ஓர் நேர்காணல் | நியூஸ் 7 தமிழ்

வேளைக்கொரு வானூர்தியில் பிரதமர் பறந்துகொண்டிருக்க, சாமானியர்களுக்கோ அமரர் ஊர்தி கூட இல்லை - ஆதவன் தீட்சண்யா

நரகல் நாறுதேன்னா நக்கிப் பார்த்துட்டுச் சொல் என்கிறார்கள் - ஆதவன் தீட்சண்யா

ரங்கநாயகம்மா என்பவர் சாதியப் பிரச்சினைக்கான தீர்வு - புத்தர் போதாது அம்பேத்கரும் போதாது மார்க்ஸ் அவசியத் தேவை என்கிற நூலை எழுதியிருப்பதாக நண்பர் வெய்யில் சொல்லும் வரை, ரங்கநாயகம்மா என்பவரை நான் அறிந்திருக்கவில்லை. அவரை அறிந்து கொண்டேயாகவேண்டும் என்கிற தனித்தத் தேவை ஏதும் நமக்கில்லை. எவ்வாய் எப்பொருள் செப்பினும் அவ்வாயின் சாதியைக் காண்பதும் அறிவு என்பதால் இணையத்தில் தேடி அவரைப் பற்றி படித்துக்கொண்டிருந்த வேளையில்தான் ‘ரஜினி நடித்தப் படத்தில் வேலை செய்ததாலேயே ரஜினியை அம்பேத்கருக்கு அடுத்தத் தலைவராக ஏற்றிருப்பவர் என வசுமித்ர007 புலனாய்வில் கண்டறியப்பட்ட அதியன் ஆதிரை’ மூலம் புத்தகம் வந்து சேர்ந்தது. ( புத்தகத்தை டெலிவரி செய்த கூரியர் தொழிலாளிக்கு யார் தலைவர் என்கிற ரகசியமும் விரைவில் அம்பலமாகக்கூடும்) 
புத்தகத்தைப் படித்துக்கொண்டிருந்த போதே அது குறித்த பதிவொன்றை எனது வலைத் தளத்தில் எழுதியிருந்தேன். ‘நாம எது சொன்னாலும் கேட்டுக்கணும், எதை எழுதினாலும் படிக்கணும்கிறது தானே ஊர்வழக்கம், அதற்கு மாறாக இவனென்ன கருத்து சொல்லக் கிளம்பியிருக்கிறான்’ என்று மொழிபெயர்ப்பாளர் தரப்பு கடுப்பாகிவிட்டது போல. …

மார்க்சீயர் வேடத்தில் அம்பேத்கரை சிறுமைப்படுத்தும் ரங்கநாயகம்மா - ஆதவன் தீட்சண்யா

தோழர். அதியன் ஆதிரை வாங்கி அனுப்பிய ரங்கநாயகம்மாவின் ‘சாதியப் பிரச்னைக்குத் தீர்வு - புத்தர் போதாது அம்பேத்கரும் போதாது மார்க்ஸ் அவசியத் தேவை’ என்கிற புத்தகத்தை வாசித்துக் கொண்டிருக்கிறேன். இந்தியாவின் சாதிகள் பற்றி எழுதிய முதல் ஆய்வாளர் தானல்ல என்றும் தனக்கும் முன்பாகவே பலரும் ஆய்ந்து எழுதியிருக்கிறார்கள் என்றும் அம்பேத்கரே பலவிடங்களில் குறிப்பிடுகின்றார். ஆனால் அவர்களில் எவரையும் இந்த ரங்கநாயகியம்மா  தனது ஆய்வுக்கு உட்படுத்தி எழுதியதாக தெரியவில்லை. எனில் அம்பேத்கரை மட்டும் இவ்வளவு வன்மமாகவும் குதர்க்கமாகவும் இளக்காரத்தோடும் அணுகும் புத்தகம் ஒன்றை எழுதியாக வேண்டிய தேவை அவருக்கு என்ன வந்தது?. ‘பள்ளு பறையெல்லாம் புத்தி சொன்னா நாங்க பாத்துக்கிட்டு சும்மா இருப்போம்னு நினைச்சியா?’ என்று பல்லைக் கடிக்கும் அப்பட்டமானதொரு சாதிவெறியரின் உளவியலுக்கு தன்னை முழுமையாக ஒப்புக்கொடுத்த ஒருவரால் மட்டுமே இப்படி எழுத முடியும். ‘இந்தியாவில் சாதிகள்’ என்கிற  அம்பேத்கரின் ஆய்வுரையை தேவைக்கேற்ப ஒட்டியும் வெட்டியும் வலிந்து பொருள்கொள்ளும் ரங்கநாயகம்மா, அதுதவிர அம்பேத்கரின் கூற்றுக்கு வேறு அர்த்தமில்லை என்று …

டாக்டரை கலெக்டராக்கும் ரசவாதி அல்லது கதைத்திருடன் - ஆதவன் தீட்சண்யா

புதுவிசை இதழில் வெளியிடுமாறு சில ஆண்டுகளுக்கு முன்பு எஸ்.லட்சுமணபெருமாள் "தனது" (ஆமாம், தனது) கதையொன்றை அனுப்பியிருந்தார். துப்புரவுத் தொழிலாளியான தலித் ஒருவர் (வேறு யார்?) படித்து மருத்துவராகிவிடுவார். அவர் தலித்தல்லாத பெண்ணொருத்தியை திருமணம் செய்துகொள்வார். தன்னை இந்த நிலைக்கு உயர்த்திய தாயை உடன் வைத்து காப்பாற்ற வேண்டும் என்று அவரை ஊரிலிருந்து அழைத்து வந்துவிடுவார் மருத்துவர். அவரது மனைவிக்கு இதில் ஒப்புதலில்லை. தனது குழந்தைகள் ஒரு துப்புரவுத் தொழிலாளியான பாட்டியிடம் நெருங்குவது அவளுக்கு அசூயையாகப்படுகிறது. போதாதற்கு, அந்தக் கிழவியும் சும்மா அடக்கஒடுக்கமாக இருக்காமல் தனது மகனின் பகுமானத்திற்கு அவமானம் தேடித்தரும்படியாகவே நடந்து கொள்கிறார். அவர்கள் குடியிருக்கும் பகுதியில் கவனிப்பாரற்று கிடக்கும் நோய்வாய்ப்பட்ட ஒரு முதியவரைக் கண்டு தாளாமல், அவரை குளிப்பாட்டி சுத்தம் செய்து அந்த  இடத்தையும் துப்புரவாக்கிவிடுகிறாள். இது மற்றவர்களின் கேலிகிண்டலுக்குரியதாகிறது. ஒரு கட்டத்தில், நானும் பிள்ளைகளும் இந்த வீட்டில் இருக்கவேண்டுமானால், உங்கம்மாவை வெளியேற்று என்று புருசனிடம் மல்லுக்கு…