வா,
யாரும் செல்லாத பாதையில்
போகலாம்
நாம்
உனக்குப்
பிரியமான
அந்தப்
பச்சை முதலையை விடுவிக்க.
கிளர்ச்சி
என்னும் தூமகேது
முட்டிச்
செல்லும் நம் நெற்றியைக்கொண்டு
அவமானங்களைத்
துடைத்தெறிந்துகொண்டே
செல்வோம்
வா
வெற்றி
பெறுவோம் அல்லது
சாவைக்
கடந்து செல்வோம்.
முதல்
துப்பாக்கி வேட்டில்
புதிய
வியப்புடன்
கானகம்
முழுவதும் விழித்தெழும்
அங்கே
அப்போது அமைதியாக உனது படை
உன்னருகே
நாங்கள்.
உனது
குரல் நாற்றிசைக் காற்றைத் துளைத்து
நிலச்
சீர்திருத்தம், நீதி, உணவு, விடுதலை
என
முழங்கும் போது
சேர்ந்து
குரல் கொடுக்க
உன்னருகே
நாங்கள்.
கூபாவின்
அம்பு முனை துளைத்த காயங்களை
அக்கொடிய
விலங்கு நக்கும் வேளையில்
பெருமித
நெஞ்சத்துடன்
உன்னருகே
நாங்கள்.
வெகுமதிகள்
பெற்றுத் தத்தித் தத்திக் குதிக்கும்
அந்த
அலங்கரிக்கப்பட்ட அற்பப் பூச்சிகளால்
எங்கள்
நேர்மை குலைந்து விடும் என எண்ணாதே
எங்களுக்கு
வேண்டியது
அவர்களது
துப்பாக்கிகள், தோட்டாக்கள்,
ஒரு
பாறாங்கல்
வேறேதும்
அல்ல.
உருக்கு
எங்களை வழிமறிக்கும்போது
நாங்கள்
கேட்கப் போவது
கூபாவின்
கண்ணீரால் நெய்த போர்வை
அமெரிக்க
வரலாறு நோக்கிப் பயணிக்கும்
எங்கள்
கெரில்லாக்களின் சடலங்கள் மீது போர்த்த
வேறேதும்
அல்ல.
ஆங்கிலம்
வழித் தமிழாக்கம்: வ.கீதா, எஸ்.வி.ராஜதுரை( (Our
Word: Guerrilla Poems from Latin America, Cape Goliard press, London,
1968 என்னும் நூலிலிருந்து)
Fidel Castro will be remembered as a key figure of the twentyth century an iconoclast a revolutionary.
பதிலளிநீக்குFidel Castro was a great egalitarian and larger than life..
But death is the greatest leveller for us all.