வியாழன், ஜூன் 20

செருப்பனாசின் - ஆதவன் தீட்சண்யா

மோசமான அரசனிடமிருந்து
மக்களைக் காக்கும் கடப்பாட்டுணர்வில்  
தானே அரியணை ஏறிய செருப்பினை 
எம்முன்னோர்கள் தைத்திருக்கிறார்கள். 

ஊரெல்லையில் 
தோரணமாய் தொங்கவிடப்படும் செருப்பு
வேப்பிலையைவிட சக்திவாய்ந்த கிருமிநாசினியாகிறது
மாவிலையைவிட மங்களகரமானது  
வேண்டாதார் அண்டாமல் விரட்டவல்லது 

புத்தி கெட்டவர்களை நல்வழிப்படுத்த 
பிய்ந்தச் செருப்பால் அடிக்கும் 
பாரம்பரிய வைத்தியம் இன்றளவும் தொடர்கிறது

செருப்பு 
காலிலிருந்துதான் நம்மைக் காக்கும் என்றில்லை
அது
அனாசின் போல ஒன்றுக்கு மேற்பட்ட விதங்களில் செயல்படுகிறது.

20.06.2024

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

செருப்பனாசின் - ஆதவன் தீட்சண்யா

மோசமான அரசனிடமிருந்து மக்களைக் காக்கும் கடப்பாட்டுணர்வில்   தானே அரியணை ஏறிய செருப்பினை  எம்முன்னோர்கள் தைத்திருக்கிறார்கள்.  ஊரெல்லையில்  த...