புதன், ஏப்ரல் 8

உன்னிலை - ஆதவன் தீட்சண்யா

உன்னிலை

பறவை உதிர்த்துப் போயிருந்த
இறகொன்றின் தனிமை
நெஞ்சையறுப்பதாய் 
நெக்குருகி நீங்கள் புலம்பியழும் வேளையில்
குட்டிபொம்மையைப் பற்றிப் பிடித்திருக்கும் 
குழந்தையின் கையொன்று 
உங்களின் மடியில் விழுந்துத் துடிக்கிறது

இப்போது உங்களுக்கு இரண்டு வாய்ப்புகள்
சரமாரியான குண்டுவீச்சுகளினூடே
நீங்கள்
அந்தக் குழந்தையின் எஞ்சிய உடலை
இடிபாடுகளுக்கிடையே தேடியாக வேண்டும்
அல்லது 
இருந்த இடத்தில் இருந்தபடியே 
இறகைப்பற்றிய கவலையில்
குழந்தையைப் பற்றியதும் இருப்பதாய்
நீண்ட விளக்கவுரையாற்ற வேண்டும். 
 
*
உருமாறி

 காற்றும் கடலும் நிலமும் போன்றே 
ஆயுதக்கிடங்காகின்றன
ஆகாயமும் பாதாளமும்   
அஞ்சி நடுங்கி 
பதுங்குக்குழிக்குள் ஒளிகிறது 
அமைதிப்புறா  
வாடும் ஆலிவ் இலைக்கொத்து 
மெதுவே பார்த்தீனியமாகிறது

(2026 ஏப்ரல் 7)
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உன்னிலை - ஆதவன் தீட்சண்யா

உன்னிலை பறவை உதிர்த்துப் போயிருந்த இறகொன்றின் தனிமை நெஞ்சையறுப்பதாய்   நெக்குருகி நீங்கள் புலம்பியழும் வேளையில் குட்டிபொம்மையைப் பற்றிப் பிட...